ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 13
பள்ளியில் சாப்பிடலாமா, தங்கலாமா?
💕 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) வின் காலத்தில் நாங்கள் கைலூலா(லுஹருக்கு முன் தூக்கம்) தூங்குவோம். அப்போது நாங்கள் வாலிபர்களாக இருந்தோம்.
திண்ணைத்தோழர்கள் நபி (ஸல்) வின் பள்ளியில் தங்கியிருந்தார்கள்,
அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) – நபி (ஸல்) காலத்தில் நாங்கள் ரொட்டி மற்றும் இறைச்சிகளை பள்ளியில் சாப்பிட்டிருக்கிறோம் (இப்னு மாஜா)
💕 கஹப் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் நல்லமுறையில் உளூ செய்து பள்ளிக்காக வெளியேறிச்சென்றால் இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு செல்லவேண்டாம்.
💕 நபி (ஸல்) ஒரு முறை கைகளை கோர்த்தவரை கண்டபோது அவ்வாறு செய்யவேண்டாம் இது ஷைத்தானுடைய வேலை.ஏனெனில் தொழுகைக்காக காத்திருக்கும்போது தொழுகையிலிருக்கிறார்.
💕 நபி (ஸல்) இரண்டு கால்களையும் உயர்த்தியவாறு அமர்வதை தடுத்திருக்கிறார்கள்.
💕 அனஸ் (ரலி) – தூண்களுக்கு இடையில் தொழுவதிலிருந்தும் நாங்கள் தடுக்கப்பட்டிருக்கிறோம் மேலும் விரட்டப்பட்டிருக்கிறோம்.
கருத்துரைகள் (Comments)