பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 08

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 8

பள்ளிவாசல்களை  சுத்தப்படுத்துதல் 

💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நாங்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல் கட்டுமாறு ஏவினார்கள் மேலும் அதை மணமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும்படி ஏவினார்கள்  (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு ஹிப்பானில் வரக்கூடிய அறிவிப்பாளர் வரிசை சிறந்தது என அறிஞர்கள் கருத்து)

மற்றொரு அறிவிப்பில் :

💕அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளியிலிருந்து வெளியில் வீசும் அசுத்தங்கள் உட்பட என்னுடைய உம்மத் செய்யக்கூடிய நல்ல அமல்கள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது

💕 நபி (ஸல்) காலத்தில் பள்ளியை சுத்தம் செய்யும் ஒரு கருப்பு பெண் மரணித்தபோது இரவு நேரமாக இருந்ததால் நபி (ஸல்) விற்கு தெரியப்படுத்தாமல் அடக்கம் செய்துவிட்டனர்.விவரம் அறிந்த நபி (ஸல்); அவர்களது கப்ருக்கு சென்று அங்கு தொழுகை நடத்தினார்கள்.