மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 10

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 10

⬇ ↔  ظهور المعازف واستحلالها

இசை வெளிப்படுதல் அதை பிரபலமாக பயன்படுத்துதல்.

 أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي , سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ : “

لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَّ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ , وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ

إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ , يَأْتِيهِمْ رَجُلُ الْحَاجَةِ , فَيَقُولُونَ : ارْجِعْ

إِلَيْنَا غَدًا , فَيُبَيِّتُهُمُ اللَّهُ , وَيَضَعُ الْعَلَمَ , وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ

الْقِيَامَةِ “ 

ஹலாலாக்குவார்கள் ↔ يستحلون

விபச்சாரம் ↔ الحِرَ

பட்டு  ↔ والحرير 
போதை ↔ والخمر

இசை   ↔ والمعازف

💝அபூ மாலிக் அல் அஷரீ (ரலி) – நபி (ஸல்) – விபச்சாரம், பட்டு, போதைவஸ்துக்கள், இசை, போன்றவற்றை ஹலாலாக்குபவர்கள் உருவாவார்கள். இன்னும் சிலர் உருவாகுவார்கள். மலைக்கு பக்கத்தில் வசதியான சூழலோடு வாழ்பவர்களிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் நாளைக்கு வாருங்கள்  என்று கூறக்கூடிய காலகட்டம் உருவாகும். 
அல்லாஹ் அவர்களை இரவோடு இரவாக அழித்து விடுவான். அவர் மீது அல்லாஹ் மழையை போடுவான் இன்னும் சிலரை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிடுவான் (புஹாரி)
💝இசை ஹராம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.