ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 12

ஹதீத் – பாகம்-12

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب العمل الذي يبتغى به وجه الله فيه سعد 

அல்லாஹ்வுடைய திருப்பொருதத்தை நாடி செய்யப்படுகின்ற அமல் இதில் ஸஹதுடைய செய்தி.

: عامر بن سعد عن أبيه في قصة الوصية وفيه الثلث والثلث كثير وفيه قوله 

فقلت يا رسول الله أخلف بعد أصحابي ؟ قال إنك لن تخلف فتعمل عملا تبتغي به

وجه الله إلا ازددت به درجة ورفعة الحديث وقد تقدم هذا اللفظ في كتاب الهجرة

إلى المدينة

 அமீர் இப்னு ஸஹத் அறிவிக்கிறார்கள் – தன் தந்தை நோய்வாய்ப்பட்டபோது மரணத்தை உணர்ந்தேன் நபி (ஸல்) என்னிடம் நோய் விசாரிக்க வந்தார்கள். என்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கிறது என்னுடைய மகள் மட்டுமே எனக்கு வாரிசு என்னுடைய சொத்தில் மூன்றில் இரண்டை நான் தருமம் செய்து விடவா?நபி (ஸல்) – வேண்டாம்-அரைவாசி ?– நபி (ஸல்) – வேண்டாம். மூன்றில் ஒன்று?– அதுவும் அதிகம் தான் ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை வசதிப்படைத்தவர்களாக விட்டுச்செல்வது பிச்சையெடுப்பவர்களாக விட்டுச்செல்வதை விட சிறந்தது.
நபி (ஸல்) விடம் கேட்கப்பட்டது-நான் என் ஹிஜ்ரத்தை விட்டும் பிற்படுத்தப்படுவேனா?(இன்னும் வாழுவேனா?)நபி (ஸல்) – எனக்குப்பின்னாலும் நீ வாழ்ந்து அந்த காலத்தில் நீ அல்லாஹ்விற்காக ஒரு அமலை செய்வாயானால் உன் அந்தஸ்து உயரும். எனக்குப் பின்னால் நீ நீண்ட காலம் வாழ வாய்ப்புண்டு ஒரு சிலர் உங்கள் மூலம் பிரயோஜனப்படுபவர் ஒரு சிலர் உங்கள் மூலம் பாதிப்படையவும் வாய்ப்புண்டு. 
 எத்தனை காலம் வாழ்ந்தாலும் நன்மை செய்தல் கூலியுண்டு என்பதற்காகவே இந்த தலைப்பில் இமாம் புஹாரி இப்படி தேர்வு செய்திருக்கிறார்கள்