ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 18

ஹதீத் பாகம் – 18

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

إن هذا المال خضرة حلوة وإن كل ما أنبت الربيع يقتل حبطا أو يلم إلا آكلة

الخضرة أكلت حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس فاجترت وثلطت وبالت

ثم عادت فأكلت وإن هذا المال حلوة من أخذه بحقه ووضعه في حقه المعونة هو

ومن أخذه بغير حقه كان كالذي يأكل ولا يشبع

……சொத்து இருக்கிறதே அது பசுமையானது சுவையானது. ஓடைகளில் முளைக்கக்கூடிய விளைச்சல்கள் ஒன்றை அழிக்கும் அல்லது அழிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும். கால்நடைகள் உண்ணக்கூடிய இடங்களை தவிர. அவை சாப்பிட்டுவிட்டு சூரியனை நோக்கி உட்கார்ந்து கொள்ளும். ஏற்கனவே உண்டதை எடுத்து மென்றுகொண்டிருக்கும். பிறகு மலஜலம் கழிக்கும். இதை மீண்டும் மீண்டும் செய்யும். ஆகவே சொத்தை அதை செலவழிக்க வேண்டிய முறையில் உபயோகித்தால் அது அவருக்கு மிகச்சிறந்த உதவியாக அவருக்கு அமையும். யார் முறையற்ற முறையில் அதை உள்வாங்குகிறாரோ அவர் நிறைய சாப்பிட்டு பசியடங்காதவன் போலாகிவிடுவான்.