ஹதீஸ் பாகம்-68
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب الخوف من الله
அல்லாஹ்வை அஞ்சுதல்
⚜ عن حذيفة عن النبي صلى الله عليه وسلم قال كان رجل ممن كان قبلكم يسيء
الظن بعمله فقال لأهله إذا أنا مت فخذوني فذروني في البحر في يوم صائف
ففعلوا به فجمعه الله ثم قال ما حملك على الذي صنعت قال ما حملني إلا مخافتك
فغفر له
ஹுதைபா (ரலி) – நபி (ஸல்)-உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் தான் செய்த அமல்களில் திருப்தி இல்லாததால் தன் குடும்பத்தை அழைத்துக்கூறினார் நான் மரணித்தால் என்னை எரித்துவிட்டு அந்த சாம்பலை சூடான ஒரு நாளில் கடலில் கலந்து விடுங்கள் என்றார். அதைப்போன்றே அவர்களும் செய்தார்கள். அல்லாஹ் அவரை ஒன்று சேர்த்து நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் உன் மீது நான் கொண்டுள்ள அச்சத்தின் காரணமாகவே இப்படி செய்தேன் என்று கூறினார் ஆதலால் அல்லாஹ் அவரை மன்னித்தான்.
⚜ அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – நபி (ஸல்) – உங்களுக்கு முன்னால் வாழ்த ஒரு மனிதர் அவருக்கு அல்லாஹ் சொத்தையும் பிள்ளைகளையும் கொடுத்திருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிய நேரத்தில் தன் பிள்ளைகளை அழைத்து அவர் கூறினார் எப்படிப்பட்ட தந்தையாக நான் உங்களுக்கு இருந்தேன் என்று கேட்டபோது சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அவர் ஆனால் இந்த தந்தை அல்லாஹ்விடம் செல்வதற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அல்லாஹ்விடத்தில் இந்த தந்தை சென்றால் அல்லாஹ் இவனை கடுமையாக தண்டிப்பான் அதனால் நான் மரணித்தால் என்னை எரித்து என் சாம்பலை அதை எடுத்து பொடியாக்கி அதை நன்றாக புயலடிக்கும் கொதிக்கும் நாளில் அதில் அந்த துகள்களை இட்டு விடுங்கள் என்று கூறினார். இறைவன் மீது ஆணையாக இப்படி செய்ய வேண்டும் என்று சத்தியமும் வாங்கிக்கொண்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள். பிறகு அல்லாஹ்; ஆகு என்று கூறினான் அந்த மனிதர் முழுமையாக வந்தார் அவரிடம் ஏன் இப்படி செய்தீர் என்று அல்லாஹ் கேட்டதும், உன்னை அஞ்சியதின் காரணமாக இப்படி செய்தேன் என்று அவர் பதிலளித்தார். அவரது அச்சத்தின் காரணமாக அல்லாஹ் அவரை மன்னித்து சொர்கத்திற்கு அனுப்பினான்.
கருத்துரைகள் (Comments)