حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 12
مَنْ لَبِسَ ثَوْباًً فقال: الحَمْدُ لله الذِي كَساني هذا( الثوب ) ورَزَقَنِيه مِنْ غَيْرِ حَوْلٍ مِنّي ولا قُوةٍ
அணிவித்தான் ↔ كَساني
இந்த ஆடையை ↔ هذا( الثوب
எனக்கு அவன் ரிஸ்க் அளித்தான் ↔ ورَزَقَنِيه
என்னுடைய முயற்சியில்லாமல் ↔ مِنْ غَيْرِ حَوْلٍ مِنّي
பலமுமில்லாமல் ↔ ولا قُوةٍ
🍁 இந்த செய்தி பலஹீனமானது. இதனுடன் சேர்த்து
(حديث مرفوع) حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ ، حَدَّثَنَا سَعِيدٌ ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ ، عَنْ أَبِيهِ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ أَكَلَ طَعَامًا ، ثُمَّ قَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعِمْنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ، وَمَنْ لَبِسَ ثَوْبًا ، قَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
நபி (ஸல்) – யார் உணவருந்தி இந்த துஆவை செய்கிறாரோ அவரது முந்திய மற்றும் பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் யார் ஒரு ஆடை அணியும் நேரத்தில் இந்த துஆ வை செய்கிறாரோ அவரது முந்திய பிந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் (அபூதாவூத்- இந்த அறிவிப்பு பலஹீனமானதாகும்
முந்திய பிந்திய பாவம் :
முந்திய பாவம் என்றால் ஆரம்பத்தில் செய்த பாவம்
பிந்திய பாவம் என்பது அண்மையில் செய்த பாவம்
🍁 முஸ்னத் அஷ்ஷாமிலும் இந்த செய்தி இடம்பெறுகிறது.
🌺இந்த செய்தியில் அபூ மர்ஹூம் என்ற ஒருவர் இடம்பெறுகிறார். இவரை இமாம் அபூ ஹாதிம், இமாம் தஹபீ, இப்னு மஹீன் போன்ற அறிஞர்கள் பலஹீனமானவர் என்று விமர்சித்திருக்கிறார்கள்.சிலர் இவரை لا باس என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
🌺 ஹதீஸ் கலை விமர்சனக்குறிப்புகள் :
ஒருவருடைய தரம் பற்றி எந்த விதமான செய்தியும் இல்லாத சமயத்தில் அவரைப்பற்றிய பாதகமான விமர்சனமோ அல்லது அவரை பலஹீனப்படுத்தும் வகையில் உள்ள விமர்சனங்கள் வந்தால் அது அறிஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும்.
🌺 ஒருவர் நம்பகமானவர் பலமானவர் என்ற நிலையில் இருக்கும்போது ஒரு பாதகமான செய்தி அல்லது அவரை பலஹீனப்படுத்தும் விமர்சனம் வந்தால் அவைகளை மிகப் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தியே ஒப்பிட்டு அவரை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை அறிஞர்கள் முடிவு எடுப்பார்கள்
🌺 ஆகவே அபூ மர்ஹூம் என்பவர் இடம் பெறுவதால் இந்த செய்தி பலஹீனமடைகிறது.
🌺 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி தனது நூலில் இதே ஹதீஸ் இன்னொரு அறிவிப்பாளர் வரிசையில் என்னிடம் இருக்கிறது என்று கூறினார்கள். அந்த அறிவிப்பை தாரீஹ் இப்னு அசாக்கீரிலும், முஸ்னத் அஷ்ஷாமீ – இமாம் தப்றானீ யிலும் இந்த செய்தி இடம்பெற்றிருக்கிறது. அதில் அல் வலீத் இப்னுல் வலீத் அத்திமிஷ்கீ என்பவர் இடம்பெறுகிறார். அவர் மிகவும் பலஹீனமானவராக இருப்பதால் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்ற நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.இமாம் தார குத்னீ இவரை முன்கருல் ஹதீஸ் (நிராகரிக்கத்தக்கவர்) என்று விமர்சித்திருக்கிறார்.
🌺 ஆனால் ஷேக் அல்பானி, இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ, ஷேக் பின் பாஸ்(ரஹ்) இந்த ஹதீஸை ஹசன் என்ற தரத்தில் உள்ளது என்று கூறியிருப்பினும் இமாம் தஹபீ, இமாம் இப்னு மஹீன், இமாம் அபூ ஹாதிம் இவரை பலஹீனப்படுத்துவதும் தான் வலுவான வாதமாக இருப்பதால் இந்த செய்தி பலஹீனமானது என்பதே பொருத்தமான கருத்தாகும்.
கருத்துரைகள் (Comments)