حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 21🅰️
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ((مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ
《☆》 உமர் (ரலி) -நபி (ஸல்) – யாரொருவர் அழகிய முறையில் உளூ செய்கிறாரோ; பிறகு
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
என்று கூறுகிறாரே அவருக்கு சொர்க்கத்தின் 8 வாயில்கள் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயிலில் நுழைவார்.
குறிப்பு :
🌺 முஸ்லிமில் வரும் செய்தி உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் வழியாக வந்தது; இந்த செய்தி உமர் (ரலி) வழியாக வந்ததாக இருக்கிறது. மேலும் இதில் அதிகப்படியான ஒரு செய்தி இருக்கிறது.
🌺 இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் – இது ஷாத் ஆன செய்தியாகும் மேலும் இது நிராகரிக்கத்தக்க செய்தியாகும். இந்த ஹதீஸில் இந்த அதிகப்படியான வார்த்தை ஆதாரபூர்வமாக நிரூபணமாகவில்லை.
🌺 ஜஹ்பர் இப்னு முஹம்மத் இப்னு இம்ரான் – இமாம் திர்மிதியின் ஆசிரியர். இவரிடம் மனனத்தில் ஒரு சிறிய குறை இருக்கிறது. இவரைத்தவிர வேறு எந்த அறிவிப்பாளரும் இந்த அதிகப்படியான செய்தியை அறிவிக்கவில்லை.
மேலும் இவர் இந்த செய்தியில் உமர் இப்னு கத்தாப் (ரலி) விற்கும் அபூ உஸ்மான் என்ற அறிவிப்பாளருக்கும் இடையில் உள்ள உக்பத் இப்னு ஆமீர் (ரலி) வை விட்டுவிட்டார்,
ஸைத் இப்னு ஹுபாப் என்பவருக்கும் முஆவியத் இப்னு ஸாலிஹ் என்பவருக்கும் இடையில் ஒருவரை விட்டுவிட்டார்.
🌺 இமாம் அஹமத் ஷாகிர் – திர்மிதி யின் இந்த அறிவிப்பில் மட்டுமே இந்த அதிகப்படியான செய்தி இடம்பெறுவதால் இந்த செய்தி பலஹீனமானது.
🌺 இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வரிசையில் குழப்பங்கள் இருக்கின்றன. இந்த தலைப்பில் அதிகமான ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை.
🌺 இமாம் புஹாரி – உமர் (ரலி) விடமிருந்து அபூ இத்ரீஸ் எந்த செய்தியையும் கேட்கவில்லை.
🌺 சமகால அறிஞர் அப்துல் அஸீஸ் அத்தரீfபீ – இந்த வார்த்தை ஆதாரபூர்வமானதல்ல.
《☆》 ஆகவே
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
இது பலஹீனமான செய்தி என்பதை புரிந்து கொள்ளலாம்.
கருத்துரைகள் (Comments)