ஹிஸ்னுல் முஸ்லிம் 41

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 41

துஆ 80: 

80- اللهم إني أصبحت

أشهدك وأشهد حملة عرشك ، وملائكتك وجميع خلقك ، أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك ، وأن محمداً

عبدك ورسولك” ( أربع مرات )]

《☆》 سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ : اللَّهُم إِنَّا أَصْبَحْنَا

نُشْهِدُكَ ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ ، وَمَلائِكَتَكَ , وَجَمِيعَ خَلْقِكَ ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ ، وَأَنَّ

مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ ، إِلا أَعْتَقَ اللَّهُ رُبُعَهُ فِي ذَلِكَ الْيَوْمِ ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ مِنَ النَّارِ ، وَمَنْ قَالَهَا

أَرْبَعَ مَرَّاتٍ أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ فِي ذَلِكَ الْيَوْمِ

அனஸ் (ரலி) – நபி (ஸல்) – காலைப்பொழுதை அடைகிற நேரத்தில் யார்

اللَّهُم إِنَّا أَصْبَحْنَا نُشْهِدُكَ ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ ، وَمَلائِكَتَكَ , وَجَمِيعَ خَلْقِكَ ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلا أَنْتَ وَحْدَكَ لا

شَرِيكَ لَكَ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

என்று கூறுகிறாரோ அன்றைய நாள் முழுவதும் அவர் எந்த பாவம் செய்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான். மாலை நேரத்தை அடையும்போது கூறினால் அந்த இரவில் அவர் எந்த பாவம் செய்திருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் (திர்மிதி – திர்மிதி இமாம் இந்த ஹதீஸை கரீப் என்று கூறுகிறார்கள்)

💕 அபூதாவூதில் இதில் இவ்வாறு இடம்பெறுகிறது இதை 2 முறை யார் சொல்கிறாரோ அவரை அல்லாஹ் அரைவாசி நரகத்திலிருந்து விடுதலை செய்து விடுவான். யார் 4 முறை சொல்கிறாரோ அவர் நரகிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுவார் என்று வருகிறது   

💕 இந்த ஹதீஸ் ஸுனன் திர்மிதி யில் இடம் பெறுகிறது. இதில் பகிய்யத் இப்னுல் வலீத் என்பவர் இடம்பெறுகிறார் அவர் மறைத்து அறிவிப்பவர். அவர் முஸ்லீம் இப்னு ஸியாத் என்பவரிடமிருந்து அறிவிக்கிறார். அவர் அறியப்படாதவர்.

💕 இதே செய்தி அபூதாவூத் இல் இடம்பெறுகிறது இரண்டிலும் அனஸ் (ரலி) வழியாக தான் இந்த செய்தி வருகிறது. இந்த அறிவிப்பில் அப்துல் ரஹ்மான் இப்னு அப்துல் மஜீத் என்பவர் இடம் பெறுகிறார். ஐவரும் அறியப்படாதவராக இருக்கிறார்கள்

💕 இந்த இரண்டு அறிவிப்புகளையும் ஷேக் அல்பானி அவர்களே லயீப் ஆக்கியுள்ளார்கள்.