ஹிஸ்னுல் முஸ்லிம் 48

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 48

86- ” بسم الله الذي لا يضرُّ مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم”

《☆》 எவனது  பெயரைக்கொண்டு எந்த தீங்கும் பூமியிலோ, வானத்திலோ, நடக்காதோ அவன் பெயரைக்கொண்டு (ஆரம்பம் செய்கிறேன்). அவன் எல்லாம் கேட்பவன் மிகவும் அறிந்தவன் 

《☆》 ஹதீஸ் கலை அறிஞர்களின் மத்தியில் அதிகமான கருத்து முரண்பாடுகள் உள்ள செய்தி.

《☆》 இரு வெவ்வேறு மனன குறைபாடு உள்ளவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் வெவ்வேறு ஊரார்கள் அறிவிக்கும் பொது அதன் நம்பக தன்மை சிறிது அதிகரிப்பது இயல்பு.

 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ ، حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ ، عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ ، يَقُولُ : سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : ” مَنْ قَالَ : بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ ” وقَالَ : فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ الْفَالِجُ ، فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ ، فَقَالَ لَهُ : مَا لَكَ تَنْظُرُ إِلَيَّ ؟ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ ، وَلَا كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الْأَنْطَاكِيُّ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ ، قَالَ : حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ ، عَنْ عُثْمَانَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، نَحْوَهُ لَمْ يَذْكُرْ قِصَّةَ الْفَالِجِ  ” 

அபூதாவூத் அவர்களின் ஆசிரியர் அபூ மவ்தூத் மூலமாக அறிவிக்கிறார் அபான் இப்னு உஸ்மான் அவர்களின் மகனிடம் கேட்டவர் வழியாக அறிவிக்கிறேன் என்று;

நபி (ஸல்) விடமிருந்து கேட்டதாக உஸ்மான் (ரலி) கூறியதாக அறிவிக்கப்படுகிறது

  بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ –

என்று எவரொருவர் 3 முறை மாலையில் கூறுகிறாரோ அவருக்கு திடீரென ஏற்படக்கூடிய எந்த சோதனையும் காலையை அடையும் வரை வராது. 3 முறை யார் காலையில் கூறுகிறாரோ மாலை வரை எந்த சோதனையும் ஏற்படாது. 

இந்த செய்தியை அறிவித்த அபான் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆகவே அவரை நான் பார்த்தேன். ஏன் பார்க்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு அபான் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது பொய் சொல்லவுமில்லை உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை குறித்து பொய் சொல்லவுமில்லை. எனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட அந்த நாளில் கோபத்தின் காரணத்தால் இந்த துஆ வை ஓதாமல் தூங்கிவிட்டேன் என்றார்கள்.

சில அறிவிப்புகளில் நான் இந்த துஆ வை 30 வருடங்களாக ஓதினேன் எனக்கு பாதிப்பு ஏற்பட்ட அந்த நாளில் போதவில்லை என்று கூறியதாக இடம்பெறுகிறது.

《☆》 அபூமவ்தூத் அவர்கள் யார் மூலமாக கேட்டார் என்பது அறிவிக்கப்படவில்லை என்பதால் இது மஜ்ஹூல்.(அறியப்படாதவர் இடம்பெறுகிறார்) மேலும் அபூமவ்தூத், அபான் அவர்களிடமிருந்து கேட்டவரிடம் நான் கேட்டேன் என கூறுகிறார்.

《☆》 அபூமவ்தூத் அவர்கள் மூலமாக வேறு சில செய்திகள் இடம்பெற்றிருப்பினும் இந்த ஒரு செய்தி மட்டுமே சரியானது.

《☆》 இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹதி மற்றும் இமாம் அபூ சுர்ஆ அர் ராஸீ இந்த ஹதீஸில் இருவரை விட்டு அறிவித்திருக்கிறார் அந்த ஒரு செய்தி மட்டுமே சரியானது. 

《☆》  இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இது ஒரு மறைமுகமான வடு என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹிப்பான் அவர்களுக்கும் இமாம் பஸ்ஸார் அவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது இந்த விஷயத்தில். 

இமாம் தாரகுத்னீ – இதில் இடையில் முஹம்மது இப்னு கஹ்பு இடையில் வருவது பிழை என்று.

《☆》 ஆகவே அபூதாவூதில் வரக்கூடிய இந்த அறிவிப்பாளர் வரிசை  பலஹீனமானது.

2வது இஸ்னாத் 

《☆》 இதே போன்ற செய்தி திர்மிதி 3388 இல் இடம்பெறுகிறது. அதில் அபான் அவர்கள் அன்றைய தினம் அந்த துஆ வை சொல்லவில்லை என்று மட்டும் வருகிறது. 

இந்த அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் இப்னு அபுசினாத் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். அவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகள் மற்றும் இராக்கிலிருந்து இவர் அறிவிக்கும் அறிவிப்புகளும், இவரது ஈராக்கிய மாணவர்கள் மூலமாக அறிவிக்கும் அறிவிப்புகள் பலஹீனமானதாகும். 

மேற்கூறப்பட்ட ஹதீஸ் இந்த 3 வழியாகவும் தான் இந்த அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது. 

இமாம் திர்மிதி இந்த செய்தியை ஹஸனுன் கரீபுன் என்று அறிவிக்கிறார்கள் (இஸ்னாதில் குறையுள்ளது) 

《☆》 இமாம் நஸயீ தனது சுனனுல் குப்ரா வில் இந்த செய்தியை அறிவித்து விட்டு அப்துல் ரஹ்மான் இப்னு அபீ சிநாத் லயீப் ஆனவர் என அறிவிக்கிறார்கள்.

3வது இஸ்நாத்

《☆》 இந்த அறிவிப்பில் இந்த துஆ வை யார் கூறுகிறாரோ அவருக்கு திடீரென ஏற்படும் எந்த பாதிப்பும் வராது என்று மட்டுமே இடம் பெறுகிறது. காலையிலும் மாலையிலும் கூறவேண்டும் என்று மட்டுமே இடம் பெறுகிறது. இதில் 3 முறை கூறுவது, பக்கவாதம் சம்மந்தமான எந்த செய்தியும் இடம்பெறவில்லை.

சுனனுல் குப்ரா – இமாம் நஸயீ 10107

《☆》 இதில் யஸீத் இப்னு பிராஸ் என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றிய தகவல்கள் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்.

4வது இஸ்நாத்

 ومن طريق قدامة بن محمد بن قدامة المديني نا المنذر بن عبد الله الحزامي نا أبان بن عثمان، قال: سمعت عثمان بن عفان، قال: قال رسول الله – صلى الله عليه وعلى آله وسلم-: “من قال إذا أصبح أو أمسى ثلاث مرات: بسم الله الحيّ الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء، وهو السميع العليم؛ لم يصبه شيء” وذكر قصة الفالج، فقال: فأصبح أبان قد ضَرَبَه الفالج، فنظر إليه بعض جلسائه، فقال: أما والله، ما كَذَبْتُ ولا كُذِبْتُ، ولازلتُ أقولها منذ ثلاثين سنة، حتى كانت هذه الليلة، فأُنسيتُها، وكان ذلك للقضاء والقدر.

 أخرجه ابن أبي خيثمة في “تاريخه” (2/369-370/برقم 3438) وابن عساكر في “تاريخ دمشق” (6/148) ولم يذكر تصريح المنذر بالسماع من أبان

இமாம் இப்னு அபீ ஹைதமா அவர்களின் தாரீஹில் – 3438

அபான் இப்னு உஸ்மான் அவர்கள் அறிவித்ததாக – بسم الله الحيّ الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء، وهو السميع العليم என்று நான் 30 வருடங்களாக இதை கூறுகிறேன் எந்த நாளில் இந்த பக்கவாதம் வந்ததோ அந்த நாளில் இதை நான் கூற மறந்து விட்டேன் என்று இடம்பெறுகிறது. 

அறிவிப்பாளர் தொடரில் 2 குறைகள்:-

இந்த அறிவிப்பில் இடம் பெரும் முந்திர் இப்னு அப்துல்லாஹ் என்பவர் அபான் இப்னு உஸ்மான் அவர்களை சந்திக்கவே இல்லை. 

அவரிடமிருந்து அறிவிக்கும் குதாமா என்பவரும் பலஹீனமானவர்.

《☆》 ஷேக் அல்பானி (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவரான அபுல் ஹசன் அல் மக்ரபி இதை حسن لغيره

(அனைத்து இஸ்னாதுகளையும் சேர்த்து இதை ஹசன் தரத்திற்கு கொண்டு வரலாம்) என்கிறார்கள். 

இமாம் தாரகுத்னி அவர்கள் மேற்கூறப்பட்ட இஸ்னாதுகளில் சிறந்தது அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது தந்தை வழியாக அறிவிக்கும் இஸ்நாத் ஆகும். (நாம் முதலாவதாக பார்த்த இஸ்நாத்)

《☆》 ஆனால் நவீன காலத்து அறிஞர்கள் பெரும்பாலானோர் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்கின்றனர்.

《☆》 இதை ஹசன் என்று எடுத்துக்கொண்டாலும் 30 வருடங்கள் இந்த துஆ வை கூறியாதாக வரும் செய்திகள் ஹசன் இல் இடம் பெறாது என்பதே சரியானதாகும்(அல்லாஹு  அஹ்லம்)