ஹிஸ்னுல் முஸ்லிம் 60

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 60

27- “اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ، اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد 

மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலுள்ள தூரத்தை போல் எனக்கும் என் பாவங்களுக்குமிடையில் தூரத்தை ஏற்படுத்துவாயாக. அசுத்தத்திலிருந்து வெள்ளை ஆடைகள் சுத்தப்படுத்தப்படுவது போல என்னுடை பாவங்களிலிருந்து என்னை சுத்தப்படுத்துவாயாக. தண்ணீரைக்கொண்டும், ஆலங்கட்டியை கொண்டும், குளிர்ந்த நீரைக்கொண்டும் என்னுடை பாவங்களை சுத்தப்படுத்துவாயாக.

حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ، قَالَ : ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً ، قَالَ : أَحْسِبُهُ ، قَالَ : هُنَيَّةً ، فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ ، قَالَ : أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ 

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் (சூரா ஃபாத்திஹா) ஓதுவதற்குமிடையில் மெளனமாக இருப்பார்கள். ஒரு அறிவிப்பாளர் சிறிது நேரம் என்று கூறியதாக நினைக்கிறேன் என்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்”என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இந்த இடைப்பட்ட மௌனமான இடங்களில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டேன்.” 

அதற்கு நபி (ஸல்) “நான்

 اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

என்று கூறுவேன் என்றார்கள். (புஹாரி)

முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பில் 3 இடங்களிலும் خَطَايَايَ என்று இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டிலும் அர்த்தத்தில் எந்த ஒரு முரண்பாடுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

《☆》 இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் இதை ஃபர்ளான தொழுகையில் ஓதியிருக்கிறார்கள் என அறிய முடிகிறது.