ஹிஸ்னுல் முஸ்லிம் 63

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 63

《☆》31- “الله اكبر كبيرا، الله اكبر كبيرا، الله اكبر كبيرا، والحمد لله كثيرا، والحمد لله كثيرا، والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ ثلاثا ـ ” أعوذ بالله من الشيطان الرجيم : من نفخه، ونفثه ،و همزه “

அபூதாவூத் 764 – ஷேக் அல்பானி இதை லயீஃப் என்கிறார்கள்.

أعوذ بالله من الشيطان الرجيم : من نفخه، ونفثه ،و همزه – என்பதற்கு شواهد مقطع 

(ஒரு ஹதீஸில் வரும் ஒரு பகுதிக்கு மட்டும் வேறு ஒரு ஹதீஸ் சாட்சியாக இருக்கும்). இந்த துஆ ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுவது சம்மந்தமான வேறொரு ஹதீஸில் இதன் ஒரு பகுதி இடம்பெறுகிறது.

الله اكبر كبيرا،والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ என்று முஸ்லிமில் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றிருப்பினும் 3 முறை என்று வரவில்லை. மேற்கூறப்பட்ட துஆ வுடன் சேர்த்தும் வரவில்லை.

《☆》 1052. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 

الله اكبر كبيرا،والحمد لله كثيرا، وسبحان الله بكرةً وأصيلا ـ 

“அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” 

(அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

《☆》 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை. 

Book :5 ஸஹீஹ் முஸ்லீம்  

《☆》 32– كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يتهجد قال: ” اللهم لك الحمد أنت نور السموات والأرض ومن فيهن ، ولك الحمد أنت قيمُ السموات والأرض ومن فيهن [ ولك الحمد أنت رب السموات والأرض ومن فيهن ]، [ ولك الحمد لك ملك السموات والأرض ومن فيهن ] [ ولك الحمد أنت ملك السموات والأرض] [ ولك الحمد] أنت الحق ، ووعدك الحق ، وقولك الحق ،ولقاؤك الحق ، والجنة حق ، والنار حق ، والنبيّون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق ] [اللهم لك أسلمت ،  وعليك توكلت ، وبك آمنت ، وإليك أنبت ، وبك خاصمت ، وإليك حاكمت ، فاغفر لي ما قدمت وما أخرت ، وأسررت، وما أعلنت ][ أنت المقدم ،وأنت المؤخر لا إله إلا أنت ][أنت إلهي لا إله إلا أنت

இந்த அறிவிப்பில் சில கூடுதல்களும் இருக்கின்றன 

 وعن أنس رضي الله عنه – أن رجلا جاء فدخل الصف ، وقد حفزه النفس فقال : الله أكبر ، الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه فلما قضى رسول الله – صلى الله عليه وسلم – صلاته قال : أيكم المتكلم بالكلمات ؟ فأرم القوم ، فقال : أيكم المتكلم بالكلمات ؟ ” فأرم القوم ، فقال أيكم المتكلم بها ؟ فإنه لم يقل بأسا ، فقال رجل : جئت وقد حفزني النفس فقلتها ، فقال : لقد رأيت اثني عشر ملكا يبتدرونها أيهم يرفعها ، رواه مسلم . 

அனஸ் (ரலி) – ஒரு மனிதர் வந்தார் தொழுகையின் ஷஃபில் சேர்ந்தார் அப்போது அவருக்கு வேகமாக மூச்சுவாங்கியது. அப்போது அவர் الله أكبر ، الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه என்றார். நபி (ஸல்) அவர்களது தொழுகையை முடித்த பின் அவ்வாறு கூறியவர் யாரெனக்கேட்டார்கள். அனைவரும் அமைதி காத்தனர். அப்போது நபி (ஸல்) இதைச்சொன்னவர் பிழையாக ஒன்றும் கூறவில்லை என்றார்கள். அப்போது அவர் நான் தான் சொன்னேன் அல்லாஹ்வின் தூதரே; ஓடி வந்ததால் கலைப்படைந்தேன் அதனால் அவ்வாறு கூறினேன் என்றார். அதற்கு நபி (ஸல்) 12 மலக்குமார்கள் இதை யார் அல்லாஹ்விடம் சேர்ப்பது என்ற விஷயத்தில் போட்டி போடுவதை நான் கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லீம்) 

இது தொழுகையின் ஆரம்பத்தில் ஓதிய துஆ என்பதே சரியான புரிதலாக இருக்க முடியும்.