பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 8A
இரவில் தூக்கத்திற்கு இடையில் திடீரென விழித்தெழுந்தால்
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ , فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , لَهُ الْمُلْكُ , وَلَهُ الْحَمْدُ , وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ , سُبْحَانَ اللَّهِ , وَالْحَمْدُ لِلَّهِ , وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ , وَاللَّهُ أَكْبَرُ , وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ , ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي , غُفِرَ لَهُ ” , قَالَ الْوَلِيدُ : أَوْ قَالَ : دَعَا اسْتُجِيبَ لَهُ , فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلَاتُهُ
யாரொருவர் இரவில் திடீரென விழித்தெழுந்து எழும் நேரத்தில் இந்த துஆ வை ஓதுகிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.அல்லது நபியவர்கள் இப்படி கூறியிருக்கலாம் அவர் துஆ செய்தால் பதிலளிக்கப்படும். அவர் எழுந்து உளூ செய்து விட்டு தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்
من تعار من الليل
تعارَّ
இந்த வார்த்தைக்கு சிலர் விழித்தெழுந்தால், தூக்கமின்மையால் உருண்டு புரள்வது, என்றெல்லாம் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் இது சாதாரணமான தூக்கத்தில் விழித்தெழும் அந்த அமைப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
⬇️↔ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவர் எவரும் இல்லவே இல்லை
அவன் தனித்தவன் ↔ وَحْدَهُ
⬇️↔ لَا شَرِيكَ لَهُ
அவனுக்கு எந்த இணையும் இல்லை
ஆட்சி அவனுக்குரியது ↔ لَهُ الْمُلْكُ
புகழ் அவனுக்குரியது ↔ وَلَهُ الْحَمْدُ
⬇️↔ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்
அல்லாஹ் தூய்மையானவன் ↔ سُبْحَانَ اللَّهِ
⬇️↔ وَالْحَمْدُ لِلَّهِ
புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது
⬇️↔ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ
மேலும் வணக்கத்திற்குரியவன் அவனைத்தவிர வேறு யாருமில்லை
⬇️↔ وَاللَّهُ أَكْبَرُ
மேலும் அல்லாஹ் மிகப்பெரியவன்
முயற்சியுமில்லை ↔ وَلَا حَوْلَ
பலமுமில்லை ↔ وَلَا قُوَّةَ
⬇️↔ إِلَّا بِاللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டே அன்றி
⬇️↔ الْعَلِيِّ الْعَظِيمِ
மிக உயர்ந்தவன் மகத்துவமிக்கவன்
⬇️↔ رَبِّ اغْفِرْ لِي
என்னுடைய இறைவனே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக
(இப்னு மாஜா)
கருத்துரைகள் (Comments)