ஹிஸ்னுல் முஸ்லிம் 9B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 9B

இந்த ஹதீஸை பற்றி அறிவிப்பாளர்கள் வரிசையில் அறிஞர்களுக்கிடையில் சர்ச்சை இருக்கிறது

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قام أحدكم عن فراشه ثم رجع إليه فلينفضه بصنفة إزاره ثلاث مرات فإنه لا يدري ما خلفه عليه بعد فإذا اضطجع فليقل باسمك ربي وضعت جنبي وبك أرفعه فإن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين فإذا استيقظ فليقل الحمد لله الذي عافاني في جسدي ورد علي روحي وأذن لي بذكره وفي الباب عن جابر وعائشة قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن وروى بعضهم هذا الحديث وقال فلينفضه بداخلة إزاره

《☆》 அபூஹுரைரா (ரலி) – உங்களிலொருவர் படுக்கையிலிருந்து எழுந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வந்தால் உங்கள் ஆடைகளால் அந்த விரிப்பை 3 முறை தட்டி விடுங்கள். நீங்கள் சென்ற பின்னர் அங்கு என்ன இருந்தது என்று அறியமாட்டீர்கள். அவர் அந்த விரிப்பில் தூங்கினால் கூறட்டும்

⬇️↔️ باسمك ربي

யா அல்லாஹ் உனது பெயரைக்கொண்டு

⬇️↔️ وضعت جنبي

என்னுடைய விலாவை(புறத்தை வைத்தேன்)

⬇️↔️ وبك أرفعه

உன் பெயரைக்கொண்டே உயர்த்துவேன்

⬇️↔️ فإن أمسكت نفسي

நீ எனது உயிரைப்பிடித்துக்கொண்டால்

அதற்கு இரக்கம் காட்டு ↔  فارحمه

நீ அதை விட்டுவிட்டால் ↔ وإن أرسلتها

⬇️↔️ فاحفظها بما تحفظ به عبادك الصالحين

உனது நல்லடியார்களுடைய உயிர்களை பேணுவது போல பேணிக்கொள்.

🍁மேலும் இந்த துஆ வை கூறிவிட்டு அவர் விழித்தெழுந்தால் அவர்

الحمد لله الذي عافاني في جسدي ورد علي روحي وأذن لي بذكره

🍁இதை ஓதிக்கொள்ளட்டும்.

பலர் இந்த துஆவை தூங்க போகும்போது ஓதுவர் ஆனால் இதன் வார்த்தைகளை பார்த்தால் தூங்கி எழுந்து எங்காவது சென்று வந்து பிறகு படுக்க நினைக்கையில் ஓதும் துஆ என இதன் வார்த்தைகளை பார்த்தால் அறிய முடிகின்றது.

🍁புகாரியில் இந்த ஹதீஸை 7393 இல் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் அவர்களிடமிருந்து சயீத் அல் மக்பூரி என்பவர் அறிவிக்கிறார்கள்.

புகாரியில் தூங்கி எழுந்து இதை சொல்லுங்கள் என்று வரவில்லை.

🍁 சயீத் அல் மக்பூரி அவர்களிடமிருந்து பலர் இதை அறிவித்திருந்தாலும் யாரும் விழித்தெழுந்தால் இதை கூறவேண்டும் என்று அறிவிக்கவில்லை

ஆனால் சயீத் அல் மக்பூரி அவர்கள் மூலமாக அறிவிக்கும் முஹம்மத் இப்னு இஜ்லான் என்பவர் மட்டுமே இதை அறிவிக்கிறார்கள். முஹம்மத் இப்னு இஜ்லான் இவர் பலமானவரல்ல. குறிப்பாக அபூஹுரைரா (ரலி) வை தொட்டும் வரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இவருக்கு சில சிக்கல்கள் இருக்கிறது.

🍁ஷேக் அல்பானி (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்), திர்மிதி போன்றவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இது திக்ர் சம்மந்தப்பட்ட விஷயத்தால் இந்த ஹதீஸை ஹஸன்(ஏற்றுக்கொள்ளத்தக்கது) என்ற தரத்திலேயே நாம் ஏற்றுக்கொள்கிறோம்.