اسماء الله الحسنى غير محصورة
அல்லாஹ்வின் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடங்கக்கூடியவை அல்ல
பாகம் – 18
فقَدْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ لَيْلَةً مِنَ الفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي علَى بَطْنِ قَدَمَيْهِ وهو في
المَسْجِدِ وهُما مَنْصُوبَتَانِ وهو يقولُ:اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ
مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى نَفْسِكَ
ஆயிஷா (ரலி) – ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை (உறக்கத்தில் என் அருகில் இல்லையே என்று) கையால் தேடினேன். எனது கை அவரது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர் ஸுஜூது செய்தவராக இருந்துகொண்டிருந்தார். அப்போது நபி ஸல் கூறினார்கள் “யா அல்லாஹ் உன்னுடைய திருப்தியைக்கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன், உன்னுடைய மன்னிப்பைக்கொண்டு உன்னுடைய தண்டனையிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன், உன்னைக்கொண்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீ உன்னை புகழ்ந்திருப்பது போன்று என்னால் உன்னை புகழ முடியாது”(ஆகவே அல்லாஹ்வின் அனைத்து பெயர்களும் நமக்கு தெரியாத காரணத்தினால் அந்த அளவுக்கு நம்மால் புகழ முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்) (ஸஹீஹ் முஸ்லீம்)
ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – (மறுமை நாளில், மஹ்ஷரில்)…..அல்லாஹ்வின் அழகிய புகழ்ச்சிகளில் சிலதை அப்போது அல்லாஹ் எனக்கு தருவான், அதற்கு முன்னர் அதை யாருக்கும் கொடுத்திருக்க மாட்டான்.(புஹாரி, முஸ்லீம்)
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ
اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ
الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي
இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) கவலை துக்கம் ஏற்படும் வேளைகளில் இந்த துஆ வை ஓதினால் கவலை நீங்கி விடும் என்று கூறினார்கள்.
“அல்லாஹுவே நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், உனது அடிமை பெண்ணின் மகன், எனது நெற்றிமுடி உன்னுடைய கையில் இருக்கிறது, உன்னுடைய தீர்ப்பு என்னில் நடந்து விட்டது, என்னுடைய விஷயத்தில் நீ வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதமானது, உனக்குரிய அனைத்து திருநாமங்களைக்கொண்டும் உன்னிடம் கேட்கிறேன், அவை நீயே உனக்கு சூட்டிய பெயர்களாகும், அல்லது அதை உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி இருக்கிறாய், அல்லது உன்னுடைய அடியார்களில் யாருக்கேனும் நீ கற்றுக்கொடுத்திருக்கிறாய், அல்லது அந்த பெயர்களை உன்னுடைய மறைவான ஞானத்தில் நீ எடுத்து வைத்திருக்கிறாய், குர்ஆனை என்னுடைய உள்ளத்திற்கு வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சுக்கு ஒளியாகவும் என்னுடைய கவலையை போக்கக்கூடியதாகவும் என்னுடைய துயரத்தை போக்கக்கூடியதாகவும் ஆக்கி வைப்பாயாக“.
(அஹ்மத்)
عن أبي هريرة رواية قال لله تسعة وتسعون اسما مائة إلا واحدا لا يحفظها أحد إلا دخل الجنة وهو
وتر يحب الوتر
அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் அதாவது 100 இல் ஒன்று குறைவான பெயர்கள் இருக்கிறது. அதை மனனம் செய்தவர்கள் சொர்க்கம் நுழைவார்கள்.(புஹாரி)
🌹 இந்த ஹதீஸில் அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் மட்டுமே உள்ளன என்று இடம்பெறவில்லை அல்லாஹ்வின் பெயர்களில் 99 ஐ மனனம் செய்தவருக்கு சுவர்க்கம் என்றே இடம்பெறுகிறது.
🌹 திர்மிதியில் இடம் பெரும் அல்லாஹ்வின் திருநாமங்கள் பட்டியலின் அடிப்படையில் தான் தற்போது நாம் எங்கும் காணும் அல்லாஹ்வின் பெயர்கள் பட்டியலாகும். அந்த ஹதீஸுகள் அனைத்தும் பலகீனமானவையாகும்.
🌹 அல்லாஹ்வின் பெயர்களை பட்டியலிடக்கூடிய ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவையல்ல என்று இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
🌹 ஆகவே அல்லாஹ்வின் திருநாமங்கள் எத்தனை என்பது அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்
கருத்துரைகள் (Comments)