ஃபிக்ஹ்
இரவுத் தொழுகை
பாகம் – 8
💕 எத்தனை ரகாஅத் தொழுவது?
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) ரமளானிலும் மற்ற காலத்திலும் 11 ரகாஅத்தை விட அதிகமாக தொழவில்லை. 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள்.பிறகு 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள். பிறகு 3 ரகாஅத் தொழுவார்கள்.- யா ரசூலுல்லாஹ் நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன்னால் தூங்குகிறீர்களா?-நபி (ஸல்)-என்னுடைய கண்கள் தான் உறங்குகிறது உள்ளம் உறங்குவதில்லை (முஸ்லீம்)
💕 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – இரவுத்தொழுகை இரண்டு இரண்டாக தொழட்டும் பஜ்ர் நெருங்குவதை அஞ்சினால் ஒரு ரகாஅத் தொழுது முடித்துக்கொள்ளட்டும் (புஹாரி, முஸ்லீம்)
💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 13 ரகாஅத் தொழுவார்கள் அதில் 5 ரகாஅத்தை வித்ர் ஆக்கிக்கொள்வார்கள்.
💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவுத்தொழுகையை சுருக்கமான 2 ரகாஅத்களைக்கொண்டு ஆரம்பிப்பார்கள் (முஸ்லீம்)
💕 ஜைத் (ரலி) – நபி (ஸல்) வின் தொழுகையை போன்று தொழுது கட்டினார்கள் – 2 சுருக்கமான தொழுகையை தொழுதார்கள், பிறகு மிக நீளமான 2 ரகாஅத், பிறகு சுருக்கமான 2 ரகாஅத் (முந்தியதை விட குறைவாக இருந்தது), பிறகு 2 ரகாஅத் முந்தியதை விட குறைவாக இருந்தது, பிறகு அதை விட குறைவான 2 ரகாஅத், பிறகு ஒரு ரகாஅத் தொழுதார்கள்.
💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவு தொழுகையை விட்டுவிட்டால் பகலில் 12 ரகாஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)
💕 நபி (ஸல்) – யாரேனும் ஒருவர் இரவுத்தொழுகையை தொழ வேண்டும் என்ற நிய்யத்துடன் உறங்கி அந்த தொழுகையை தொழவில்லையென்றாலும் தொழுத நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்(இப்னுமாஜா, நஸயீ)
💕 நபி (ஸல்) – யாரேனும் ஒருவர் நோயின் காரணமாகவோ பிரயாணத்தின் காரணமாகவோ வழமையாக செய்யும் அமலை செய்யவில்லையென்றால் வழக்கமாக அவர் செய்த நன்மையை அல்லாஹ் வழங்குவான்
கருத்துரைகள் (Comments)