அகீதா
இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?
பாகம் – 10
ஷிர்க் மற்றும் குஃப்ர்
✥ ஸூரத்துல் பய்யினா 98:6
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓٮِٕكَ هُمْ
شَرُّ الْبَرِيَّةِ ؕ
➥ நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
முஷ்ரிக் மற்றும் காஃபிர் – இஸ்லாத்திற்கு வெளியே உள்ள அத்தனை போரையும் குறிக்கும்.
((إذا اجتمعا افترقا، وإذا افترقا اجتمعا))
ஈமான் இஸ்லாம் – குஃப்ர் ஷிர்க் :
இந்த இரண்டு வார்த்தைகளையும் அல்லாஹ் ஒரே இடத்தில் உபயோகித்தால் அதன் கருத்து வெவ்வேறாக இருக்கும் வெவ்வேறு இடத்தில் (அல்லாஹ்) உபயோகிக்கும் போது கருத்து ஒரே கருத்தாக இருக்கும்.
✥ ஸூரத்துல் ஹுஜுராத் 49:14
قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ ۚ
وَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـٴًــــا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
➥ “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
[highlight color=”orange”]அல்லாஹ் தன் திருக் குர் ஆனில் காஃபிர், முஷ்ரிக் இவர்கள் இருவரையும் வேறுபடுத்தவில்லை.[/highlight] முனாஃபிக்குகளைத் தான் காஃபிர்களை விட மிகவும் மோசமானவர்கள் என்று கூறுகிறான்.
✥ ஸூரத்துன்னிஸாவு 4:145
اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ
➥ நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
கருத்துரைகள் (Comments)