அகீதா
இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?
பாகம் – 7
✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? என்று கேட்டார் என கூறுவார்கள்.
✽ குர்ஆனைப் போன்ற ஒரு வசனமெனும் கொண்டு வாருங்கள் என்ற அல்லாஹ்வின் சவால் யாராலும் முறியடிக்க முடியாது.
❤ ஸூரத்துன்னிஸா 4:82
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا
➥ அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
✽ உலகத்தில் யாருக்கும் நான்தான் வானத்தை படைத்தேன் மற்ற எதையும் படைத்தேன் என எவராலும் சொல்லமுடியவில்லை.
✽ தன்னை தானே இறைவன் என்று கூறிய எவரும் நான்தான் இதை படைத்தேன் அதை படைத்தேன் என்று கூற முடியவில்லை.
❤ ஸூரத்து மர்யம் 19:68
فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا ۚ
➥ ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
கருத்துரைகள் (Comments)