உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 2

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 2

உளூவின் சிறப்பு

 அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் செய்தால் தலையால் காதுகளால் செய்த பாவங்கள் வெளியாகிறது, கால்களை கழுவினால் கால் விரல்களுடைய நகங்களுக்கு கீழே செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது. பள்ளிக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு எட்டும் அவர்களுடைய தொழுகையும் மேலதிக நன்மையாகும். (முவத்தா மாலிக், ஸுனன் நஸயீ, இப்னு, ஹாகிம்)

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய பாவங்களையெல்லாம் அழிக்கப்பட்டு நன்மைகள் உயர்த்தப்படக்கூடிய ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

  1. வெறுப்புள்ள நேரங்களிலும், பரிபூரண உளூ செய்தல்,
  2. பள்ளிகளுக்கு எட்டுக்களை அதிகமாக வைப்பது
  3. தொழுகைக்காக காத்திருப்பது

யுத்தக்களத்தின் நேரத்தில் கிடைக்கும் நன்மை இதற்கு கிடைக்கும். (முஸ்லீம், திர்மிதி, நஸாயீ)

 உளூவை பாதுகாப்பவர் முஃமின் என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு மாஜா அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ ரழி தவ்பான் ரழி)