ஃபிக்ஹ்
உளூவின் பர்ளுகள் பாகம் – 3
❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன்.
❣ உங்களுடைய உம்மத்தை மறுமையில் எப்படி அடையாளம் காண்பீர்கள்? – கருத்த குதிரைகளில் ஒரு குதிரையில் மட்டும் முகமும் காலும் வெளுத்த குதிரையை காண்பது போல் உளூவின் அடையாளத்தை வைத்து என் உம்மத்தை கண்டு பிடிப்பேன். (ஸஹீஹ் முஸ்லீம்)
❣ நபி (ஸல்) பிலால் (ரலி) யின் காலடி சத்தத்தை சொர்க்கத்தில் கேட்டார்கள். காரணம் கேட்ட போது நான் எப்பொழுது உளூ முறிந்தாலும் உடனே உளூ செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுவேன் என்றார்கள்.
கருத்துரைகள் (Comments)