ஃபிக்ஹ் பாகம் – 2
உளூவின் சுன்னத்துக்கள்
உறுப்புக்களை கழுவுதல் :
ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும் அதிகமாக கழுவக்கூடாது
இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் :
அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ)
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் 3 முறை கைகளை கழுவாமல் அவர் பாத்திரத்தில் கையை விட வேண்டாம் ஏனெனில் தூங்கும்போது அவரது கை எங்கு தங்கியிருந்தது என்று அவருக்கு தெரியாது (திர்மிதி,, நஸாயீ, இப்னுமாஜா,புஹாரி – 3 முறை என்ற வாசகம் குறிப்பிடவில்லை)
வாய் கொப்பளித்தல் :
லாகீத் இப்னு சப்ரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் உளூ செய்தால் வாய் கொப்பளியுங்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் பைஹகீ).
கருத்துரைகள் (Comments)