ஃபிக்ஹ் பாகம் – 3
உளூவின் சுன்னத்துக்கள்
الاستنشاق والاستنثار
மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் :
✿ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்)
✿ அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு இதை மூன்று முறை செய்தார்கள் பிறகு நபி (ஸல்) இப்படித்தான் உளூ செய்தார்கள் என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத், நஸாயீ)
ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَ جَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ
وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا
✿ அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) – நபி (ஸல்) – ஒரே அள்ளில் வாய்க்கும், மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள் அதை 3 முறை செய்தார்கள். (புஹாரி, முஸ்லீம்)
✿ இன்னொரு அறிவிப்பில் 3 முறை அள்ளி மூக்கில் ஏற்றி சீறி விட்டார்கள் என வந்துள்ளது.
கருத்துரைகள் (Comments)