ஃபிக்ஹ்
சஜ்தா சஹ்வு
பாகம் – 2
ஸூரத்துல் கஹ்ஃபு 18 : 110
❤ (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
❣ நபி (ஸல்) – மர்யமின் மகன் ஈஸா (அலை) யை கிறிஸ்தவர்கள் உயர்த்தியது போன்று நீங்கள் என்னை உயர்த்தாதீர்கள் என்னை அல்லாஹ்வுடைய அடிமை என்றும் தூதர் என்றும் கூறுங்கள்.
ஸூரத்து அலம் நஷ்ரஹ் 94 : 4
❤ மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
ஸூரத்துல் கலம் 68 : 4
❤ மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني
❣ அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – நான் ஒரு மனிதன் நீங்கள் மறப்பதைப்போல நானும் மறக்கிறேன் நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் (புஹாரி)
❣ தொழுகையில் இமாம் தவறிழைத்தால்
பின்னாலிருக்கும் ஆண்கள் سُبْحَانَ الله என்று கூற வேண்டும் பெண்கள் கை தட்ட வேண்டும்.
கருத்துரைகள் (Comments)