ஜனாஸா சட்டங்கள் 01

 أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 1

முன்னுரை :-

ஆசிரியர் புத்தகம் எழுதியதற்கான காரணத்தை கூறுகையில்” நான் ஒரு ஜனாஸா விற்கு சென்றிருந்தேன் அப்போது அந்த ஜனாஸாவின் சொந்தக்காரர் என்னிடம் ஜனாஸா பற்றிய புத்தகத்தை நீங்கள் எழுதினால் மக்களுக்கு நபிவழியில் ஜனாஸாவிற்கான கடமைகளை செய்ய உதவியாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த சட்டதிட்டங்களில் பல்வேறுவிதமான கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றது. மிகவும் நீளமான செய்திகள் கொண்ட பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே அவ்வளவு எளிதில் இதை கோர்வை செய்ய முடியாதே என நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த சகோதரர் என்னை மீண்டும் ஆர்வப்படுத்தியதால் இதை செய்ய முடிவெடுத்தேன்”. 

ما يجب على المريض 

நோயாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் 

1) நோயாளி அல்லாஹ்வின் விதியை பொருந்திக்கொண்டு  பொறுமையை கைக்கொள்ளவேண்டும்.

وَعَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ  قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ: «عَجَباً لأمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ

خَيْرٌ، وَلَيْسَ ذَلِكَ لأِحَدٍ إِلاَّ للْمُؤْمِن: إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ

صَبَرَ فَكَانَ خيْراً لَهُ». رواه مسلم

நபி (ஸல்) – ஒரு முஃமினின் காரியங்கள் ஆச்சரியமாக  இருக்கிறது. அவனுடைய காரியங்கள் அனைத்தும் நலவானதாகவே இருக்கும்.  முஃமினை தவிர வேறு யாருக்கும் இது வராது. அவனுக்கு ஒரு சந்தோஷமான நிலை ஏற்பட்டால் அவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் அதுவே அவனுக்கு சிறந்ததாக இருக்கும். ஒரு துக்கமான காரியம் ஏற்பட்டால் பொறுத்துக்கொள்வான் அதுவே அவனுக்கு சிறந்ததாக இருக்கும்(ஸஹீஹ் முஸ்லீம்)

عن جابر بن عبدالله الأنصاري – رضي الله عنهما – أنه سمِع رسول الله – صلى الله عليه

وسلم – قبل موته بثلاثة أيام يقول: ((لا يَموتنَّ أحدكم إلا وهو يُحسن الظن بالله – عز وجل))؛

رواه مسلم

நபி (ஸல்) – உங்களிலொருவர் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தே தவிர மரணிக்க வேண்டாம்.(முஸ்லீம், சுனனுல் பைஹகீ, முஸ்னத் இமாம் அஹமத்)