أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 3
3) நோய் கடுமையானால் மரணத்தை வேண்டுவது கூடாது.
عن أم الفضل ، أن رسول الله صلى الله عليه وآله وسلم دخل عليهم وعباس عم رسول الله
صلى الله عليه وآله وسلم يشتكي ، فتمنى عباس الموت ، فقال له رسول الله صلى الله عليه
وآله وسلم : ” يا عم ، لا تتمن الموت ، فإنك إن كنت محسنا فإن تؤخر تزداد إحسانا إلى
إحسانك خير لك ، وإن كنت مسيئا فإن تؤخر فتستعتب من إساءتك خير لك ، فلا تتمن الموت
” هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه بهذا اللفظ ، إنما اتفقا على حديث قيس
عن خباب ، لولا أن رسول الله صلى الله عليه وآله وسلم نهانا أن نتمنى الموت لتمنيته
உம்முல் பாளுல் (ரலி) – அப்பாஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை காண நபி (ஸல்) அவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றபோது அப்பாஸ் (ரலி) தனக்கு மரணம் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபோது நபி (ஸல்) அவர்கள்”என் சிறியத்தந்தையே, நீங்கள் மரணம் வந்துவிட வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் நீங்கள் நல்லவராக இருந்தால் இன்னும் அதிகமான நன்மைகள் செய்யமுடியும். நீங்கள் தவறிழைப்பவராக இருந்தால் இன்னும் சில காலம் வாழ்ந்து அதற்கு பரிகாரம் செய்யலாம். எனவே நீங்கள் மரணத்தை ஆசை பட வேண்டாம்(முஸ்னத் அஹமத், ஹாகிம் – புஹாரி, முஸ்லீம் இமாம்களின் ஷர்த்தின் படி இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள், இமாம் தஹபீ இந்த ஹதீஸை சரி கண்டிருக்கிறார்கள்.
வேண்டுமானால் ஒருவர் இவ்வாறு கூறலாம்
فإن كان لا بد متمنيا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا
لي
அனஸ் (ரலி) – ஒருவர் மரணத்தை வேண்டி துஆ செய்ய வேண்டுமானால் இவ்வாறு வேண்டுமானால் கூறலாம் என நபி (ஸல்) கூறினார்கள். “நான் உயிர் வாழ்வது நன்மையாக இருந்தால் என்னை உயிர் வாழ வை, நான் மரணிப்பது தான் நன்மையாக இருந்தால் என்னை மரணிக்க வைத்து விடு என்று பிரார்த்திக்கலாம்”(முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)