أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 4
4) நோயாளியிடம் மற்றவர்களின் உடமைகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் அவரிடம் பணமோ பொருளோ கொடுக்க அந்த நேரத்தில் இல்லையென்றால் அது பற்றி வஸிய்யத் செய்துவிட வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ كَانَتْ لَهُ
مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ، إِنْ
كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ
فَحُمِلَ عَلَيْهِ
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் தனது சகோதரருக்கு அவருடைய மானம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அல்லது அவரது பொருள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அநியாயம் செய்திருந்தால் அதை மறுமை வரும் முன் சரிசெய்துவிடட்டும். அந்த நாளில் தங்கக்காசுகளோ வெள்ளிக்காசுகளோ ஏற்றுக்கொள்ளப்படாது. அவரது நல்ல அமல்கள் இருந்தால் அதை எடுத்து அநியாயம் செய்யப்பட்டவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான் அவரிடம் நல்ல அமல் இல்லையென்றால் அநியாயம் செய்யப்பட்டவரின் பாவத்தை எடுத்து அவர் மீது சுமத்தப்படும். (புஹாரி)
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : هَلْ تَدْرُونَ مَنْ الْمُفْلِسُ ؟ قَالُوا :
الْمُفْلِسُ فِينَا ، يَا رَسُولَ اللَّهِ ، مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ . قَالَ : إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ
الْقِيَامَةِ بِصِيَامٍ وَصَلَاةٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ عِرْضَ هَذَا ، وَقَذَفَ هَذَا ، وَأَكَلَ مَالَ هَذَا ، فَيُقْعَدُ
، فَيَقْتَصُّ هَذَا مِنْ حَسَنَاتِهِ ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يَقْضِيَ مَا عَلَيْهِ مِنْ
الْخَطَايَا أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ .
رواه مسلم
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ஓட்டாண்டி தெரியுமா? என்று கேட்டபோது யாரொருவரிடம் ஒரு வெள்ளிக்காசோ அல்லது அதுவும் இல்லாமல் இருக்கிறாரோ அவர் தான் ஓட்டாண்டி என்று பதிலளிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” என்னுடைய உம்மத்தில் மறுமையில் நோன்பு, தொழுகை, ஜகாத், போன்ற அனைத்து அமல்களையும் செய்து அதை கொண்டு வருவார், ஆனால் அவர் பிறரை திட்டியிருப்பார், அவதூறு பேசியிருப்பார், நல்ல பெண்களை அவதூறு பேசியிருப்பார், அநியாயமாக பிறரின் சொத்தை சாப்பிட்டிருப்பார், பிறரது இரத்தத்தை ஓட்டியிருப்பார், பிறரை அடித்திருப்பார் ஆகவே அவரது நன்மைகளெல்லாம் பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஆயினும் பாதிக்கப்பட்டவர்கள் மீதம் இருப்பின் இவரிடம் கொடுப்பதற்கு நன்மை இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து இவருக்கு கொடுக்கப்படும். அந்த பாவங்களை சுமந்து இவர் நரகத்திற்கு அனுப்பப்படுவார். அந்த மனிதன் தான் மறுமையில் உண்மையான ஓட்டாண்டி என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)