ஜனாஸா சட்டங்கள் 12

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 12

மரணித்தவர் கடனாளியாக இருந்தால் 

மரணித்தவர் கடனாளியாக இருந்தால் அவரது சொத்திலிருந்து அந்த கடனை அடைத்துவிட வேண்டும். அவரிடம் சொத்து இல்லாவிடில் அவருடைய வாரிசுகள் அதை அடைக்க வேண்டும். அவர்களிடமும் இல்லையெனில் ஆட்சியாளர் அதை அடைக்க வேண்டும். 

அல்லது அந்த மரணித்தவரின் சொந்தக்காரர் யாரேனும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.(எவ்வாறாயினும் கடனாளியாக இருக்கும் நிலையில் அடக்கம் செய்வது விரும்பத்தக்கதல்ல)

ஒரு ஷஹீதுடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் கடனை தவிர. 

ஸஅத் இப்னு அfஃப்ளல் (ரலி) தனது மரணித்த சகோதரர் விட்டுச்சென்ற 3 திர்ஹம்களை அவர்களது குடும்பத்திற்கு செலவு செய்ய நான் விரும்பினேன் அப்போது நபி (ஸல்) உமது சகோதரரின் கடனை நிறைவேற்றுங்கள் என்றார்கள் நான் அதை நிறைவேற்றிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் எனது சகோதரரின் கடன்களை நான் அடைத்துவிட்டேன் ஆனால் ஒரு பெண்ணின் 2 தீனார்களை தவிர ஏனெனில் அவளிடம் எந்த ஒரு அத்தாட்சியுமில்லை என கூறியபோது நபி (ஸல்) “அவளது கடனை கொடுத்துவிடு அதற்கு அவள் தகுதியானவன் தான்” என கூறினார்கள். 

ஜாபிர் (ரலி) – ஒரு மரணித்த மனிதருக்கு நாங்கள் குளிப்பாட்டி கஃபனிட்டு தொழுவிக்கும் இடத்திற்கு(மகாமு ஜிப்ரஈல்) கொண்டு வைத்தோம் பிறகு நபி (ஸல்) அவர்களை தொழுவிக்க அழைத்தபோது இந்த இறந்தவருக்கு கடன்கள் ஏதேனுமிருக்கிறதா என்று கேட்டார்கள் ஆம் அவருக்கு 2 தங்க காசுகள் கடன் இருக்கிறது என்று கூறியபோது நபி (ஸல்) பின்னால் வந்து விட்டு நீங்களே உங்களுடைய சகோதரருக்கு தொழுவித்து விடுங்கள். அப்போது அங்கிருந்த அபூ கத்தாதா (ரலி) அவர்கள் அந்த கடனுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று கூறியபோது நபி (ஸல்) அதை உம்முடைய பணத்திலிருந்து கடனை அடைக்க வேண்டும் என்று கூறிய போது அவர் ஒப்புக்கொண்டதும் நபி (ஸல்) அந்த மய்யத்திற்காக தொழவைத்தார்கள்.

பிறகு ஒரு முறை நபி (ஸல்) அபூ  கத்தாதா (ரலி) அவர்களை சந்தித்தபோது அந்த கடனை அடைத்துவிட்டீர்களா என்று கேட்டார்கள் ஆம் என்று சொன்னபோது இப்போது தான் அந்த இறந்தவரின் உடல் குளிர்ந்திருக்கிறது என்று பதிலளித்தார்கள்.

(ஹாகிம், அஹமத்)