أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 14
மரணித்தவரின் சொந்தக்காரர்களுக்கு கடமையானவை
தனது உறவினர் மரணித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தவருக்கு 2 விஷயங்கள் கடமையாகின்றது
பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
ஸூரத்துல் பகரா 2:155 – 157
(2:155) وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(2:156) الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(2:157) اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
- அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நபி (ஸல்) அடக்கஸ்தலத்தை கடந்துசெல்லும்போது அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், ‘அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!’ எனக் கூறினார்கள். அப்போது அந்தப்பெண் பேசியவர் யாரென்று பார்க்காமல் “என் துன்பத்தை நீ அரியமாட்டாய் இங்கிருந்து போய் விடு என்று கூறியபோது நபி (ஸல்) சென்று விட்டார்கள்.
“உன்னிடம் இப்போது பேசியவர் அல்லாஹ்வின் தூதர்” என்று ஒருவர் கூறியதும் அவர் உடனடியாக நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லை (மன்னித்துவிடுங்கள்) என்றாள். “துன்பம் ஏற்பட்ட உடனே மேற்கொள்ளும் பொறுமைக்குத்தான் நற்கூலி கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.
Volume :2 Book :23 புஹாரி
கருத்துரைகள் (Comments)