أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني
ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்)
பாகம் – 15
குழந்தைகள் மரணித்த உடன் பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் தீர்ப்புக்கு பணிந்துவிடுபவர்களுக்கு பெரும்கூலியுண்டு
لا تموت لأحد من المسلمين ثلاثة من الولد فتمسه النار إلا تحلة القسم
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.) ‘அதனை (நரகை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை’ என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Volume :2 Book :23 புஹாரி
- ‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிக்கொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது.
Volume :1 Book :3 புஹாரி
ما من مُسْلِمَيْنِ يموتُ لهما ثلاثةٌ من الولدِ لم يَبْلُغُوا الْحِنْثَ إلا أدخلهم اللهُ وأَبَوَيْهِمُ الجنةَ بفضلِ رحمتِه ، قال : ويكونونَ على بابٍ من أبوابِ الجنةِ ، فيُقالُ لهم : ادخلوا الجنةَ ، فيقولونَ : حتى يَجِيءَ أَبَوَانَا ، فيُقالُ لهم : ادخلوا الجنةَ أنتم وأَبَوَاكم بفضلِ رحمةِ اللهِ
அபூஹுரைரா (ரலி) – பருவமடையாத 3 குழந்தைகள் மரணித்த பெற்றோரையும் குழந்தைகளையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழையச்செய்கிறான். அப்பிள்ளைகள் சுவர்க்கத்தின் வாசலில் நின்றுகொண்டிருப்பார்கள். ‘சுவர்க்கத்தில் நுழையுங்கள்!’ என்று கூறப்படும்போது ‘எங்கள் பெற்றோர் இல்லாமல் நுழையமுடியாது’ என்பார்கள். “நீங்களும் உங்கள் பெற்றோர்களும் அல்லாஹ்வின் அருளினால் சுவர்க்கத்தில் செல்லுங்கள்” என்று கூறப்படும்.(நஸயீ, பைஹகீ. இந்த ஹதீஸ் புஹாரி முஸ்லீம் இமாம்களின் ஷர்த்தின் படி ஸஹீஹ் ஆனதாகும்.)
- அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) ‘எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் ‘ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்’ எனக் கூறியதும் ஒரு பெண் ‘இரண்டு குழந்தைகள் இறந்தால்?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டு குழந்தை இறந்தாலும் தான்’ என்றார்கள்.
Volume :2 Book :23 புஹாரி , முஸ்லீம்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – ஒரு அடியானின் விருப்பத்திற்குரிய குழந்தையை அல்லாஹ் கைப்பற்றி அவர் அல்லாஹ் விடம் நன்மையை எதிர்பார்த்து பொறுமையை மேற்கொண்டால் அதற்கு கூலியாக அல்லாஹ் சுவர்க்கத்தை தவிர வேறெதையும் கொடுப்பதில்லை. (நஸயீ, – ஹசன்)
கருத்துரைகள் (Comments)