ஜமாஅத் தொழுகை
பாகம்-3
❣அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவர் 5 நேர தொழுகைகளையும் அதற்கான அழைப்பு கொடுக்கப்படும்போதே அதை பாதுகாத்துக்கொள்ளட்டும் ஏனெனில் அல்லாஹ் தனது மார்க்கமாக்கிய ஒரு நேர்வழியாகும் ஆகவே உரிய நேரத்தில் தொழுவது நேர்வாழிகளில் ஒன்று. ஜமாத்தை விட்டு வீடுகளில் தொழுபவரைப்போன்று நீங்களும் ஆகினால் சுன்னாவை விட்டுவிட்டவர்களாகி விடுவீர்கள். எங்களில் தெளிவான நயவஞ்சகரென்று தெரிந்தவரை தவிர ஜமாத்துக்கு வராமலிருக்க மாட்டார்கள். நடக்க முடியாதவர் இரண்டு பேருடைய தோள்களில் கைகளை இட்டு தொழுகைக்கான வரிசையில் வந்து நிற்பார்கள்(ஸஹீஹ் முஸ்லீம்) மற்றொரு அறிவிப்பில் – நபி (ஸல்) எங்களுக்கு நேர்வழியை கற்றுக்கொடுத்தார்கள் அது எந்த பள்ளியில் பாங்கு சொல்லப்படுகிறதோ அந்த பள்ளியில் தொழுவது.
கருத்துரைகள் (Comments)