ஜமாஅத் தொழுகை 09

ஜமாஅத் தொழுகை

பாகம்-9

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهٌ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَلا تُكَبِّرُوا

حَتَّى يُكَبِّرَ ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

قَالَ مُسْلِمٌ وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَلا تَسْجُدُوا حَتَّى يَسْجُدَ ، وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا ، وَإِذَا صَلَّى

قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعِينَ ” . قَالَ أَبُو دَاوُدَ : ” اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ” ، أَفْهَمَنِي بَعْضُ أَصْحَابِنَا عَنْ سُلَيْمَانَ 

இன்னும் ஒரு அறிவிப்பில், முஸ்னத் இமாம் அஹ்மத், சுனான் அபுதாவூத், “இமாம் ஆக்கப்பட்டதெல்லாம் அவரை பின்தொடரப்பட வேண்டும் என்பதற்கு தான். 

[ ] அவர் தக்பீர் சொல்லும் வரை நீங்கள் தக்பீர் சொல்ல வேண்டாம்.

[ ] அவர் ருகூஹ் செய்யும் வரை நீங்கள் ருக்கூ செய்யாதீர்கள். 

[ ] அவர் சுஜூத் செய்யும் வரை நீங்கள் சுஜூத் செய்ய வேண்டாம்.

அபு ஹுரைரா (ரலி) –  உங்களில் ஒருவர் இமாமுக்கு முன்னால் தன் தலையை உயர்த்தினால், அவரின் தலையை கழுதையின் தலைபோன்று அல்லது அவருடைய ரூபத்தை கழுதையின் ரூபம்போன்று அல்லாஹ் மாற்றுவதை உங்களில் ஒருவர் பயப்பட கூடாதா?(புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) – மனிதர்களே நான் உங்களுடைய இமாம். ருகூஹ்வை கொண்டோ, சுஜூதை கொண்டோ, கியாமை கொண்டோ, உட்காருவதை கொண்டோ, திரும்புதலை கொண்டோ, எதை கொண்டும் என்னை நீங்கள் முந்தாதீர்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

كنا نُصلي خلف النبي صلى الله عليه وسلم فإذا قال : سمع الله لمن حمده ، لم يَحْنِ أحدٌ مِـنّـا ظهره حتى يضع

النبي صلى الله عليه وسلم جبهته على الأرض

பரா இப்னு ஆஸிப் (ரலி) – நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழக்கூடியவர்களாக இருந்தோம். அவர்கள் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று சொன்னால்,  எங்களில் ஒருவர் நபி ஸல் தரையிலே தன்னுடைய நெற்றியை வைக்கும் வரை தனது முதுகை வளைக்க மாட்டார், (புஹாரி)