தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10

தஃப்ஸீர் 
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10

 வசனம் 72

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏

   அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

 நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு செல்லாமல் நட்டுவிட்டு செல்.

 வசனம் 73

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا‏

   இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

❤ மதுபானம் ஹராம் என்று அறிவிக்கப்பட்டவுடன் மதீனாவின் தெருவெல்லாம் மது ஆறுகளாக ஓடியது.(உடனே கட்டுப்பட்டார்கள்)

❤ இப்ராஹீம்(அலை) பிள்ளையை அறுக்கச்சொல்லி அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த உடன் கட்டுப்பட்டார்.
இஸ்மாயில்(அலை) ஆய்வு செய்து சம்மதிக்கவில்லை அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்த உடன் கொலை செய்யப்பட சம்மதித்தார்கள்.