தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5

தஃப்ஸீர் 
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5

 வசனம் 65

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ   اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

   “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.

 நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் பாதுகாவல் தேடுவீர்.

ان عذاب ربك لوا قع ماله من دافع

 உமர்(ரலி) – நிச்சயமாக உன்னுடைய ரப்பின் வேதனை வந்தே தீரும் அதை தடுக்க யாருமில்லை என்ற வசனத்தை திரும்ப திரும்ப ஓதியே நோய்வாய்ப்பட்டார்.

 நபி(ஸல்) – ஒரு முறை மிம்பரிலிருந்து أنذرتكم النار (உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன்) என்று சத்தத்தை உயர்த்தி கூறிக்கொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) வில் தோளிலிருந்து துண்டு கீழே விழுந்தது. ஸஹாபாக்கள் அனைவரும் கையால் முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுதார்கள்.

 நரக நெருப்பின் நிறம் கருப்பு. நரகத்தின் குறைந்த தண்டனை நெருப்பாலான செருப்பு அதை காலில் அணிந்தால் மூளை கொதிக்கும்.

 நரகத்தில் தரப்படும் சூடான நீர் முகத்தை பொசுக்கும். அதை குடித்தால் அவர்களுடைய குடல்கள் துண்டு துண்டாகிவிடும்.

 பசித்தால் அவனுக்கு சீழும் சலமும் தான் கொடுக்கப்படும். அதை விழுங்க முடியாமல் தடுமாறுவான். மரணம் எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் ஆனால் அவன் மரணிக்க மாட்டான். தோல் பொசுங்கி விட்டால் வேறு தோல்களை அல்லாஹ் மாற்றுவான்.

 ஜக்கூம் உலகில் ஒரு சொட்டு விழுந்தால் உலகமே விஷமாகிவிடும். ஆனால் நரகவாசிகள் உணவே அதுதான்.