தஃப்ஸீர் பாடம் 13
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b)
⭕ மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது
❤ சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற
விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் )
⭕ நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்.
ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் :
- நம் பலம், ஆற்றல், நம்மைச்சூழ உள்ள காரணிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உதவி தேடுதல் (மனித சக்திக்கு அப்பாற்பட்டது).
- மனிதசக்திக்கு உட்பட்டது.
🔰படைப்பினங்களிடம் உதவி தேடுதல் எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதா❔
எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.யாரிடம் உதவி கேட்டுச்செல்கிறோமோ அவரால் அந்த உதவியை செய்ய முடிந்தால் தான் அது அனுமதிக்கப்படும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட உதவியை மனிதரிடம் தேடுவது ஹராம் ஆகும்.
கருத்துரைகள் (Comments)