தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

தஃப்ஸீர்

ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

  صلوا كما رأيتموني أصلي

 நபி (ஸல்) கூறினார்கள், என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.

 நபி (ஸல்) அவர்களின் வெளிப்படையான தொழுகை மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களிடம்
இருந்த ஹுஷூஹும்
 (அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுதலும் தொழுகையில்) நம்மிடம் இருக்க வேண்டும்.

♥️ சூரா அல்அன்கபூத்   29:45

(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராகஇன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக;நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்;அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

ஒரு தொழுகையாளியின் உள்ளம் விசாலமானதாக இருக்க வேண்டும்.

♥️ சூரா அல்மாஊன்   107:4, 5, 6, 7  

 இன்னும், தொழுகையாளிகளுக்குக் கேடுதான் (107:4)

 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்,அசிரத்தையாக)வும் இருப்போர் (107:5)

 அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள் (107:6)

 மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (107:7)

 ஈஸா (அலை) யின் துஆ 

♥️ சூரா அல்மாயிதா   5:118

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்அன்றிநீ அவர்களை மன்னித்து விடுவாயானால்நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்)

(இந்த சூராவை ஓதும்போது நபி (ஸல்) சத்தமிட்டு அழுது துஆ செய்தார்கள். அல்லாஹ்விடமிருந்து நற்செயதி வரும்வரை அழுது அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.)