தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொழுகையின் ஃபர்ளுகள்

🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும்.

தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு):

அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும்

ஸூரத்துல் பய்யினா 98:5

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்…

🌼 انما الاعمال بالنيات

உமர் (ரலி) – நபி (ஸல்) – அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணத்தைக்கொண்டே. (புஹாரி)

🌼 نوى- ينوى- نية (நிய்யத்) எண்ணுதல்

நிய்யத் என்றால் அரபு மொழியின் அர்த்தத்தில் – ஒரு விஷயத்தை செய்வதென முடிவெடுப்பது என்று அர்த்தம்.

மார்க்க அடிப்படையில் : அல்லாஹ்வை நெருங்குவதற்காக ஒரு காரியத்தை செய்வதென உறுதிகொள்வது.

🌼 நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.

🌼 வாயால் மொழிவதற்கு அரபியில் تلفظ என்று கூறுவார்கள்  

🌼 இப்னுல் கய்யிம் (ரஹ்)- நிய்யத் என்றால் ஒரு காரியத்தை செய்ய நினைப்பது அல்லது முடிவெடுப்பது. அதன் இடம் உள்ளமாகும். அதற்கும் நாவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை.

🌼 தொழுகைக்கு வாயால் நிய்யத்தை கூற வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.

🌼 நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் ஆகும் என பெரும்பாலான அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.

🌼 مَن أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد”  ورواه مسلم بلفظ ءاخر

وهو: ” من عمل عملا ليس عليه أمرنا فهو رد

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) – யார் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ள படாது.

யாரொருவர் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.(புஹாரி)