ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 2
[highlight color=”yellow”]இரத்தம்[/highlight]
✦ பிராணிகளின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய இரத்தம் அசுத்தமாகும் (இரத்தம் சாப்பிடுவதும் ஹராமாகும்).
✦ மாதவிடாய்க்கால இரத்தமும் அசுத்தமாகும்.
✦ ஆயிஷா (ரலி) – நாங்கள் கறிகளை சமைத்து சாப்பிடுவோம். சமைத்த பாத்திரத்தில் இரத்தத்தின் அடையாளங்கள் இருக்கும்(ஆகவே சிறிய அளவிலான கறியுடன் இருக்கும் இரத்தம் அசுத்தமல்ல).
✦ முஸ்லிம்கள் காயங்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறிய அளவிலான இரத்தம் அசுத்தமல்ல.
[highlight color=”yellow”]பன்றி[/highlight]
❤ சூரா அல் அன்ஆம் 6:145
قُل لَّا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا
مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ
وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ
➥ நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் – (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்..
கருத்துரைகள் (Comments)