ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 5
✥ உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளின் சிறுநீரும் மலமும் அசுத்தமாகும் (கழுதை, பருந்து….)
✥ அப்துல்லாஹ் இப்னு மசூத் – நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற சென்றார்கள்.என்னிடம் 3 கற்களை கொண்டு வரச்சொன்னார்கள் ஆனால் 2 கற்கள் தான் எனக்கு கிடைத்தது ஆனால் 3 வது கல் கிடைக்காததால் 3 வதாக கழுதையின் விட்டையை கொண்டு சென்றேன். அந்த கழுதையின் விட்டையை வீசிவிட்டார்கள்.
✥ எந்த பிராணியுடைய மாமிசத்தை உண்பதற்கு அனுமதியிருக்கிறதோ அதனுடைய மலமும் ஜலமும் நஜீஸ் அல்ல.
✥ ஆதாரம் – அனஸ் (ரலி) – சில மக்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு ஒட்டகத்தின் பாலையும் சிறுநீரையும் குடிக்கக்கொடுக்கச் சொன்னார்கள்.
✥ நபி (ஸல்) – அசுத்தமான பொருளில் அல்லாஹ் நிவாரணத்தை வைக்கவில்லை .
✥ நபி (ஸல்) விடம் – ஆட்டுத்தொழுவம் அல்லது மாட்டுத்தொழுவத்தில் தொழலாமா என்று கேட்டபோது தொழலாமே என்று கூறினார்கள். ஒட்டகம் கட்டப்படும் இடத்தில தொழலாமா என்று கேட்டபோது வேண்டாம் என தடுத்தார்கள்.
✥ இப்னு முன்திர் (ரஹ்) கூறினார்கள் – உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மலஜலம் அசுத்தமா இல்லையா என்பதில் இரு கருத்துக்கள் இருக்கிறது.
ஒட்டகத்தின் சிறுநீர் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது
கருத்துரைகள் (Comments)