ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9
✤ நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர்.
✤ நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்)
ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் மற்றவர்களின் கண்களிலிருந்து மறையும் அளவிற்கு தூரமாக செல்வார்கள் (இப்னு மாஜா)
[highlight color=”pink”]கழிவறையில் செல்வதானால் :[/highlight]
بِسْمِ اللَّهِ. اللَّهُـمَّ إِنِّي أَعُـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبَائِثِ
அல்லாஹுவின் பெயரால் ↔ بِسْمِ اللَّهِ
நிச்சயமாக நான்↔ إِنِّي
அல்லாஹுவே ↔ اللَّهُـمَّ
உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் ↔ أَعُـوذُ بِـكَ
ஆண் ஷைத்தானிலிருந்தும் ↔ مِـنَ الْخُـبْث
பெண் ஷைத்தானிலிருந்தும் ↔ وَالْخَبَائِثِ
✤ திறந்தவெளியில் தேவைகளை நிறைவேற்றச்சென்றால் ஆடைகளை உயர்த்தும்போது இந்த துஆ வை செய்ய வேண்டும்.
✤ மலம் ஜலம் கழிக்கும்போது அவசியத்தேவையில்லாமல் பேசக்கூடாது. அல்லாஹ்வை நினைவு கூறுவதை தவிர்க்க வேண்டும்.
✤ நபி (ஸல்) – ஒருமுறை சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஸலாம் சொன்னபோது நபி (ஸல்) பதில் சொல்லவில்லை.
கருத்துரைகள் (Comments)