தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 25

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 25

மனிதனுக்கு ஷைத்தான் தெளிவான எதிரியாக இருக்கிறான்

 ஸூரத்து யூஸுஃப் 12:5

قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ

مُّبِيْنٌ‏

   “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.

 ஸூரத்து யாஸீன்36:60

اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ‌‌ۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏

   “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:62

وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُ‌ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

   அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் – நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.

 ஸூரத்துல் அஃராஃப் 7:22

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ‏

   நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?”

 ஸூரத்துல் கஸஸ் 28:15

قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ‏

   “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.

 ஸூரத்து ஃபாத்திர் 35:6

  நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.

 ஸூரத்து ஸாத் 38:82

قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏

   அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.

 ஸூரத்துல் அஃராஃப் 7:17

   “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 24

 வசனம் 21

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ

بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا

وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

ஈமான் கொண்டவர்களே – يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا

ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள் – لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌

எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ – وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ

ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான் – فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌

உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ

உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது – مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا

தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் – وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌

அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏

   ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

 ஸூரத்துல் பகரா 2:168

يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ

عَدُوٌّ مُّبِيْنٌ‏

   மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

 ஸூரத்துல் பகரா 2:208

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ

مُّبِيْنٌ‏

   நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

 ஸூரத்துல் அன்ஆம் 6:142

وَ مِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا‌ ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ

لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏

   இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் – நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்– நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.

 மேற்கூறிய வசனங்களில் ஒரு இடத்தில் மனிதர்களே என்றும் மற்ற மூன்று இடங்களிலும் ஈமான் கொண்டவர்களே என்று அல்லாஹ் கூறுகிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 23

 நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும்.

 இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும்.

 வசனம் 20

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ

மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ

அல்லாஹ் இரக்கமுடையவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கிறான் – وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

   இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 22

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 22

 வசனம் 19

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا

وَالْاٰخِرَةِ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ

அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ

மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ

ஈமான் கொண்டவர்கள் மத்தியில் – فِى الَّذِيْنَ اٰمَنُوْا

அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை – لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ

இம்மையிலும் மறுமையிலும் – فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ؕ

மேலும் அல்லாஹு அறிகிறான் – وَاللّٰهُ يَعْلَمُ

மேலும் நீங்கள் அறியமாட்டீர்கள் –وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ ‏

    எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 21

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 21

 வசனம் 18

وَيُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

மேலும் அல்லாஹ் விவரிக்கிறான் – وَيُبَيِّنُ اللّٰهُ

உங்களுக்கு – لَـكُمُ

வசனங்களை – الْاٰيٰتِ‌ؕ

மேலும் அல்லாஹு அறிந்தவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான் – وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

   இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 20

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 20

 வசனம் 16

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

அதை செவியுற்றபோது கூறியிருக்கக்கூடாதா – وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ

எங்களுக்கு (தகுதி) இருக்கவில்லை – مَّا يَكُوْنُ لَـنَاۤ

இப்படி பேச – اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ۖ

இது பெரும் பழியாகும் – هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

   இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

 வசனம் 17

يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ۚ‏

அல்லாஹு உங்களுக்கு அறிவுரை கூறுகிறான் – يَعِظُكُمُ اللّٰهُ

மீள்வது – اَنْ تَعُوْدُوْا

இது போன்ற – لِمِثْلِهٖۤ

ஒரு போதும் – اَبَدًا

நீங்கள் முஃமின்களாக இருந்தால் – اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ۚ ‏

   நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 19

 வசனம் 15

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ

وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ

மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ

உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ

(اسم موصول)  ஒன்று ↔ مَّا

உங்களுக்கு இல்லை ↔ لَـيْسَ لَـكُمْ

அதைப்பற்றி அறிவு இல்லை ↔ بِهٖ عِلْمٌ

அதைப்பற்றி நினைக்கிறீர்கள் ↔ وَّتَحْسَبُوْنَهٗ

லேசானதாக ↔ هَيِّنًا ‌

அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதாக இருக்கும் ↔ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ

   இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

 படிப்பினை என்பது வசனத்தை வைத்து தான் எடுக்கவேண்டுமே தவிர சம்பவத்தை வைத்து அல்ல

 பித்னாவின் இந்த காலத்தில் காதுகளையும் வாய்களையும் பேணிக்கொள்வோம்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 18

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 18

 வசனம் 14

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ

عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏

அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் ↔ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ

மேலும் அவனுடைய அன்பும் ↔ وَرَحْمَتُهٗ

இம்மையில் ↔ الدُّنْيَا

மேலும் மறுமையில் ↔ وَالْاٰخِرَةِ

உங்களை தீண்டியிருக்கும் ↔ لَمَسَّكُمْ

நீங்கள் ஈடுபட்டிருந்த விஷயத்திலே ↔ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ

கடினமான வேதனை   ↔ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏

   இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.

 நபி(ஸல்) – உங்களுடைய அமல்களால் நீங்கள் சொர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வுடைய அன்பால் தான் செல்ல முடியும் – ஸஹாபாக்கள் உங்களுக்கும் யா ரசூலுல்லாஹ் ? ஆம் எனக்கும் இது தான் ஆனால் அல்லாஹ் அவனுடைய அன்பால் சூழ்ந்து கொண்டான்.

 நபி(ஸல்) – எந்த கண்ணும் காணாத எந்த காதும் கேட்காத எந்த உள்ளமும் கற்பனை செய்யாத இன்பங்கள் சொர்க்கத்தில் உள்ளன.

 அல்லாஹ்வை நேசிக்கும் உள்ளம் நமக்கு இருக்க வேண்டும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 17

 வசனம் 13

لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏

கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ

நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌

அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ

அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ

அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ الْـكٰذِبُوْنَ 

➥   அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 16

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 16

❀ நபி(ஸல்) மிஃராஜில் கண்ட காட்சி – சிலர் நெருப்பாலான கத்தரிக்கோலால் தங்களது நாவுகளை கத்தரித்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நன்மையை சொன்னார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை.

 நபி(ஸல்) – சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பிறகு நரகில் சிலர் குடல்கள் வெளியேறி செக்குமாடு சுற்றும் நிலையில் சுற்றுவார்கள். மிக மோசமான அந்த நிலையை கண்டு பிற நரகவாசிகள் கேட்பார்கள் – நான் பிறருக்கு நன்மையை ஏவினேன் நான் அதை ஏற்று நடக்கவில்லை என்று கூறுவாராம்.