மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 4

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 4

நடந்து முடிந்த அடையாளங்கள்

اعدد ستا بين يدي الساعة موتي، ثم فتح بيت المقدس

 பைத்துல் முகத்தஸ் வெற்றிக்கொள்ளப்படும் (ஹிஜ்ரி 16 உமர் (ரலி) ஆட்சியில் வெற்றிக்  கொள்ளப்பட்டு விட்டது. சில உலமாக்கள் இது மீண்டும் வெற்றிக் கொள்ளப்படும் என்றும் கருத்து கூறுகிறார்கள்)

طاعون عمواس

 நபி (ஸல்) – அம்வாஸ் என்ற தொற்றுநோய் பரவும் (உமர் (ரலி) காலத்தில் இந்த நோய் பரவியது)

استفاضة المال والاستغناء عن الصدقة

 பொருளாதாரம் முஸ்லீம் சமுதாயத்தில் வழிந்தோடும்.

للا تَقُومُ السَّاعةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُهُ مِنْهُ

صَدَقَةً، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُ لَهُ لا إِرَبَ لِي فِيهِ

 உங்களில் பொருளாதாரம் அதிகரிக்கும் வரை மறுமை ஏற்படாது. எந்த அளவிற்கு என்றால் ஒருவருக்கு சாதகா கொடுக்கப்பட்டால் எனக்கு தேவையில்லை என்று கூறுவார். அந்த அளவிற்கு செல்வம் பெருகும்.

 நபி (ஸல்) முன்னாள் பசியால் விழுந்தார்கள் – சாப்பாடு இருந்திருந்தால் உங்களுக்கு தான் தந்திருப்பேன். ஒரு காலம் வரும் உலகம் உங்களுக்கு கீழ் குவியும் – இன்று நீங்கள் சிறந்தவர்களா? அன்றா? – இன்று தான் நீங்கள் சிறந்தவர்கள்.

 குழப்பங்கள் அதிகமாகுதல் ↔ ظهور الفتن