அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 5
✻ நபி (ஸல்) – பாழடைந்த ஓலை வீட்டை நோக்கி அந்த வீட்டில் மழை பொழிந்தால் எப்படி அந்த வீடு நனையுமோ அந்த அளவுக்கு குழப்பம் ஒவ்வொரு பகுதியிருந்தும் வரும்.
✻ உமர் (ரலி) – ஹுதைபாஹ் (ரலி) இடம் பித்னா வை பற்றி கேட்ட போது – உங்களுக்கும் பித்னாவுக்கும் இடையில் ஒரு மூடப்பட்ட கதவு இருக்கிறது.
إن بين يدي الساعة فتنا كقطع الليل المظلم، يصبح الرجل فيها مؤمناً ويمسي
كافراً، ويمسي مؤمناً ويصبح كافراً، القاعد فيها خير من القائم، والقائم فيها خير
من الماشي، والماشي فيها خير من الساعي، فكسروا قسيكم، وقطعوا أوتاركم
واضربوا سيوفكم الحجارة، فإن دخل على أحدكم فليكن كخير ابني آدم
✻ காரிருள்களின் தொடரைப்போல் குழப்பங்கள் மறுமைநாளுக்கு இடையில் இருக்கின்றன. காலையில் முஃமினாக இருப்பான் மாலையில் காஃபிராகி விடுவான், மாலையில் முஃமினாக இருப்பான் காலையில் காஃபிராகி விடுவான். அந்த காலத்தில் நிற்பவனை விட அமர்ந்திருப்பவர் சிறந்தவர். நிற்பவர் நடப்பவரை விட சிறந்தவர். நடப்பவர் ஓடுபவரை விட சிறந்தவர். உங்களுடைய அம்புகளை உடைத்து விடுங்கள் வாளை கல்லில் அடியுங்கள். வீட்டுக்குள் அந்த குழப்பம் வந்தால் ஆதமுடைய மகன்களில் சிறந்தவரே போல அமைதியாய் இருந்துவிடுங்கள்.
تَّواعَوُّذُ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
✻ வெளிப்படையான மற்றும் உள்ளரங்கமான அனைத்து பித்னாவை விட்டும் பாதுகாவல் தேடுங்கள்.
கருத்துரைகள் (Comments)