ஃபிக்ஹ்
இஸ்திகாரா தொழுகை
நன்மையை நாடி தொழும் தொழுகை:
❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) எங்களுக்கு குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுப்பது போன்று இஸ்திகாரா தொழுகையை கற்றுத்தரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
❣ உங்களிலொருவருக்கு ஏதாவது ஒரு காரியம் செய்யவேண்டுமென்ற எண்ணம் வந்து விட்டால் அவர் பர்ளு அல்லாத இரண்டு ரக்காத் தொழட்டும்
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ
وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي
وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ
أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ
عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي
↔ اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ
அல்லாஹ்வே உன்னுடைய அறிவைக்கொண்டு உன்னிடத்தில் அந்த நன்மையை தேடுகிறேன்
↔ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ
உன்னுடைய ஆற்றலைக்கொண்டு நான் உன்னிடத்தில் ஆற்றலை கேட்கிறேன்
↔ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ
மகத்தான உன்னுடைய அருளை உன்னிடத்தில் நான் கேட்கிறேன்
↔ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ
நீ சக்திவாய்ந்தவன் நான் சக்தியற்றவன்
↔ وَتَعْلَمُ وَلا أَعْلَمُ
நீ அறிந்தவன் நான் அறியாதவன்
↔ وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ
நீ மறைவானவற்றை மிக அறிய கூடியவன்
↔ اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ
இறைவா நீ அறிந்தால்
↔ نَّ هَذَا الأَمْرَ
இந்த (என்னுடைய) காரியம்
(هنا تسمي حاجتك) – (அல்லாஹ்விடம் கேட்கப்போகும் அந்த விஷயத்தை இங்கே சொல்ல வேண்டும் )
↔ خَيْرٌ لِي
எனக்கு நன்மை
↔ ي دِينِي وَمَعَاشِي
என்னுடைய மார்க்கத்திலும் என்னுடைய வாழ்க்கையிலும்
↔ وَعَاقِبَةِ أَمْرِي
என்னுடைய இந்த காரியத்தினுடைய கடைசி வரைக்கும்
↔ أَوْ قَالَ
அல்லது நபி(ஸல்) கூறினார்கள் (ஹதீஸ் அறிவிப்பாளருக்கு சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் கூறும் வார்த்தை)
↔ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ
இப்போதும் என்னுடைய இந்த காரியம் முடியும் வரை
↔ فَاقْدُرْهُ لِي
அதை எனக்கு நீ ஏற்படுத்திக்கொடு
↔ وَيَسِّرْهُ لِي
அதை எனக்கு இலகுவாக்கிக்கொடு
↔ ثُمَّ بَارِكْ لِي فِيهِ
பின்பு அந்த காரியத்தில் எனக்கு அருள் புரிவாயாக
↔ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي
இந்த காரியத்தில் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும், வாழ்க்கையிலும் என்னுடைய கடைசி வரை எனக்கு இது தீமையாக இருந்தால்
↔ أَوْ قَالَ
அல்லது நபி(ஸல்) கூறினார்கள் (ஹதீஸ் அறிவிப்பாளருக்கு சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் கூறும் வார்த்தை)
↔ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي
இப்போதும் என்னுடைய இந்த காரியம் முடியும் வரையிலும் என்னை விட்டும் அதை தூரமாக்கிவிடு
↔ وَاصْرِفْنِي عَنْهُ
அதை விட்டும் என்னை தூரமாக்கிவிடு.
↔ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ
பிறகு எனக்கு (எது) நன்மையோ அதை ஏற்படுத்தி கொடு.
↔ ثُمَّ أَرْضِنِي
பின்பு அதை எனக்கு பொருந்திக்கொள்வாயாக
❣ இந்த துஆ வை கேட்டுவிட்டு அதற்கு பிறகு அவருக்கு எது மனதிற்கு சரியாக தோன்றுகிறதோ அது தான் அவருக்கு நன்மை என நபி (ஸல்) கூறினார்கள்.
❣ ஒரு மனிதன் அவன் எதை செய்யவேண்டும் என்று முடிவு செய்ய முடியாமல் தடுமாறினால் இப்படி தொழுது துஆ செய்ய வேண்டும்.
கருத்துரைகள் (Comments)