ஃபிக்ஹ்
ஸலாத்துல் தவ்பா
பாகம் – 1
🌷அபூபக்கர் (ரலி)- நபி (ஸல்) கூற நான் கேட்டேன் எந்த ஒரு மனிதனாவது ஏதாவது ஒரு பாவம் செய்து பிறகு அந்த மனிதன் எழுந்து உளூ செய்து தொழுது பிறகு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறிவிட்டு கீழ்வரும் வசனங்களை ஓதினார்கள்.(அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, பைஹகீ, திர்மிதி-ஹசன்)
ஹதீஸுகளில் ஸலாத்து தவ்பா என்று வராவிட்டாலும் அறிஞர்கள் இப்படி பெயரிடுகிறார்கள்.
சூரா ஆலு இம்ரான் 3:135,136
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا
اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
(135)தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَنِعْمَ اَجْرُ
الْعٰمِلِيْنَؕ
(136) அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)