ஸலாத்துல் தவ்பா 06

ஃபிக்ஹ்

ஸலாத்துல் தவ்பா

பாகம் – 6

🌷இமாம்களின் கருத்துப்படி பாவமன்னிப்புக்கு 5 நிபந்தனைகள் 

(1) இஹ்லாசுடன் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் 

(2) பாவங்களை விட்டு விட வேண்டும் 

(3) செய்த தவறுக்காக கவலைப்பட வேண்டும் 

ஆதம் , ஹவ்வா (அலை) அவர்கள் பாவமன்னிப்பிற்க்காக செய்த துஆ 

சூரா அல் அஃராஃப் 7:23

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

(4)இனிமேல் இப்படி பட்ட பாவங்களை செய்ய மாட்டேன் என்று முடிவெடுக்க வேண்டும் 

ஆதாரம் 

சூரா ஆலு இம்ரான் 3:135

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால், அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கத்தேடுவார்கள்; (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர, (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (த் தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே (அதில்) நிலைத்திருக்கவு மாட்டார்கள் (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்)

(5)மரணம் வருவதற்கு முன்னால் பாவமன்னிப்பு தேட வேண்டும் 

🌷ஒரு மனிதனுக்கு மனிதன் பாவம் செய்து விட்டால் இந்த 5 நிபந்தனைகளுடன் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடினால் போதாது.

எந்த மனிதருக்கு பாவம் செய்தோமோ அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.