ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 66

ஹதீஸ் பாகம்-66

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜ عن أبي هريرة سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها

في النار أبعد مما بين المشرق  

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூற நான் கேட்டேன் – ஒரு அடியான் ஒரு வார்த்தையை பேசுகிறார் அதன் விளைவு என்னவென்று அறியாமல் பேசிவிடுகிறார் அதன் காரணமாக நரகத்தில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரத்தில் விழுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஸூரத்துத் தவ்பா 9 : 65; 66

وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ لَيَـقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ‌ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰيٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ‏

(65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ‌ ؕ اِنْ نَّـعْفُ عَنْ طَآٮِٕفَةٍ مِّنْكُمْ نُـعَذِّبْ طَآٮِٕفَةً ۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ‏

(66) புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.

⚜ عبد الله بن مسعود رضي الله عنه قوله (مِنْ أَكْبَرِ الذَّنْبِ عِنْدَ اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ اتَّقِ اللَّهَ . فَيَقُولُ :

عَلَيْكَ بِنَفْسِكَ

அப்துல்லாஹ் இப்னு மசூது (ரலி) – ஒரு மனிதன் பேசுகிற வார்த்தையில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான வார்த்தை அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்படும்போது நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று பதிலளிப்பதாகும்.

⚜ عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن العبد ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا

يرفعه الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு வார்த்தை பேசுகிறான் அது அல்லாஹ் பொருந்திக்கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை அந்த வார்த்தையை கவனிக்காமல் அதன் மூலம் அல்லாஹ் நிறைய தரஜாக்களை(படித்தரங்களை) உயர்த்துவான். சில சமயம்  ஒரு மனிதன் கவனமில்லாமல் ஒரு வார்த்தையை பேசிவிடுவான் அது அல்லாஹ்வை கோவப்படுத்தக்கூடியாதாக இருக்கும் அதன் மூலமாக அவன் நரகத்திற்கு செல்வான்.