ஸீரா 01 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦1 

 நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பல நூற்கள் வெளியாகியிருப்பினும் ஆதாரப்பூர்வமாக ஸஹீஹ் லயீஃப்களை பிரித்தெடுத்து தொகுக்கப்பட்ட நூலே

“சீரத்துன் நபவிய்யா ஸஹீஹா” என்ற இந்நூலாகும். இதை எழுதியவர்.

அக்ரம் (ض)தியா அல் உமரி என்பவராவார்.

💕நபித்துவத்திற்கு முந்திய காலம்:

الحياة الدينية فى مكة மக்கா வாழ்க்கை

 ஹாஜரா (அலை) அவர்களும் தனது மகன் இஸ்மாயில் (அலை) இருவருமாக முதல்  முதலில் அந்த பாலைவனத்தில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தினரும் ஜம்ஜம் நீருக்கு அருகில்  குடியமர்ந்தார்கள்.

 இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) இருவரும்  கஃபாவை கட்டினார்கள் அது மனித சமூகத்தினர் அனைவருக்குமான பள்ளிவாசல்களில் முதன்மையான பள்ளிவாசலாக இருக்கிறது. ஜுர்ஹும் கோத்திரத்தினரும் இப்ராஹிம் (அலை)  கொண்டு வந்த அதே கொள்கையையே பின்பற்றினார்கள். காலப்போக்கில் அவர்கள் கொள்கையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.

✥ அம்ரு இப்னு லுஹை அல் ஹுஸாயீ  என்பவன் ஜாஹிலிய்யா காலத்திலே ஷாம்(சிரியா) பகுதியிலிருந்து மக்காவிற்கு சில சிலைகளைக்கொண்டு வந்தான். அந்த சிலைகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதன் பக்கம் அவர்களை ஆர்வமூட்டினான்.

✥ நபி (ஸல்) – அம்ருப்னு லுஹை அல் ஹுஸாயீ தன்னுடைய குடல்களையெல்லாம் இழுத்தவனாக நரகத்திலே வலம் வருவதை நான் கனவிலே பார்த்தேன்;காரணம் وانه أَوَّلَ النَّاسِ سَيَّبَ السَّوَائِبَ முதல் முதலில் மிருகங்களை கடவுள் பெயரால் நேர்ந்து விட்டவன் அவன் தான். ஒட்டகங்களையெல்லாம் தெய்வங்களின் பேரில் நேர்ந்து விடுகின்ற ஒரு பணியை முதல் முதலில் ஆரம்பித்தவன் இவன் தான்