ஸீரா
பாகம் ௦2
💕குர்ஆனில் ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கைகளில் சிலவற்றை அல்லாஹ் எடுத்துக்கூறுகிறான்
அல்லாஹ்விடம் சிலைகள் பரிந்துரை செய்யும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாகவே அவர்கள் அவைகளை வணங்கி வந்தார்கள்.
🏵 ஸூரத்து யூனுஸ் 10:18
وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ
اللّٰهِؕ…
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்;…
✤ இந்த வசனத்தின் மூலம் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள் என்று விளங்குகிறது
✤ கஃபாவில் இப்ராஹிம் (அலை) இஸ்மாயில் (அலை) அவர்களுடைய சிலைகளையும் வைத்திருந்தார்கள்.
💕 மூதாதையரின் வழியே சரி என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்
🏵 ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:22
بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَىٰ أُمَّةٍ وَإِنَّا عَلَىٰ آثَارِهِم مُّهْتَدُونَ
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
💕ஹஜ்ஜில் கலக்கப்பட்ட மூட நம்பிக்கைகள்
- கஃபாவில் சிலைகள் வைக்கப்பட்டன.
- அந்த சிலைகளை சுற்றி தவாஃப் செய்தார்கள்.
- ஸஃபாவிலும் மர்வா விலும் சிலைகள் வைத்திருந்தார்கள்.
- இப்ராஹிம் நபி காட்டித்தந்த முறைக்கு மாற்றமாக அரபா தினத்தில் முஸ்தலிஃபா வில் தங்கினார்கள்.
- பாவம் செய்த ஆடைகளுடன் கஃபாவை வலம் வர முடியாது என்று கூறி நிர்வானமாக வலம் வந்தார்கள்.
கருத்துரைகள் (Comments)