ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦6

💕 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும்

 ஸூரத்துல் அன்ஃபால் 8:35

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).

 சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள்.

 லாத் உஸ்ஸா என்ற சிலைகளின் பெயர்களில் சத்தியங்கள் செய்துக்கொண்டிருந்தார்கள்.

 நபி (ஸல்) – ஒரு மனிதன் கவனிக்காமல் ஒரு வார்த்தையை சொல்கிறான் அதன் காரணமாக அவன் நரகத்தின் அடிபாதாளத்தில் விழுந்து விடுகிறான்.

 நட்சத்திரங்களின் காரணமாக மழை பொழிந்தது என நம்புதல்

 வம்சாவழியை சொல்லி பரம்பரை பெருமையை சொல்லுதலும் பிறரின் கோத்திரத்தை அவமானப்படுத்துவதும்

أن النبي صلى الله عليه وسلم قال: “أربع من أمتي من أمر الجاهلية لا

يتركونهن: الفخر في الأحساب، والطعن في الأنساب، والاستسقاء بالنجوم،

والنياحة…”.

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – என்னுடைய உம்மத்தில் 4 ஜாஹிலிய்யா பழக்கங்கள்:

🍃 குடும்ப கெளரவத்தை சொல்லிப்பெருமை கொள்வது

🍃 வம்சாவழியை சொல்லி குத்திக்காட்டுவது

🍃 நட்சத்திரங்களால் மழை பொழிகிறது என நம்புவது

🍃 ஒப்பாரி வைப்பது.

(புஹாரி)

🍃 பாட்டன் பூட்டன் செயல்களை வைத்து ஒருவரை குறைகாணுவார்கள்.

 கஃபாவிற்கு சொந்தக்காரர்கள் என பெருமைப்பட்டார்கள்

 ஸூரத்துல் முஃமினூன் 23:67

مُسْتَكْبِرِيْنَ ‌ۖ  بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ‏

ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).