ஹிஸ்னுல் முஸ்லிம் 14

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 14

3- دعاء لبس الثوب الجديد

حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ النَّجَّادُ إِمْلاءً ، قَالَ : قُرِئَ عَلَى يَحْيَى بْنِ جَعْفَرٍ وَأَنَا أَسْمَعُ ، ثنا عَبْدُ الْوَهَّابِ ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : كَانَ النَّبِيُّ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ قَمِيصًا أَوْ إِزَارًا أَوْ عِمَامَةً , يَقُولُ : ” اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ، أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ ” ، قَالَ أَبُو نَضْرَةَ : وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا رَأَوْا عَلَى أَحَدِهِمْ ثَوْبًا , قَالُوا : يَبْلَى وَيُخْلِفُ اللَّهُ عَزَّ وَجَلَّ

உனக்கே எல்லாப்புகழும் ↔ اللَّهُمَّ لَكَ الحَمْدُ

நீயே எனக்கு இந்த ஆடையை அணிவித்தாய் ↔ أَنْتَ كَسَوتَنِيه

அதன் நன்மையிலிருந்து கேட்கிறேன் ↔ أسْألك مِنْ خَيرِهِ

அது செய்யப்பட நன்மையையும் நான்கேட்கிறேன் ↔ وخَيْرَ ما صُنع لَهُ

அதன் தீங்கை விட்டும் நான் பாதுகாவல்தேடுகிறேன் ↔ وأعُوذُ بِكَ مِنْ شرِّه

அது செய்யப்பட தீங்கிலிருந்தும் ↔ وشَرَّ ما صُنِعَ لَهُ

(திர்மிதி, அபூதாவூத்) இந்த செய்தி பலஹீனமானதாகும். 

இதில் சயீத் அல் ஜுரைரீ என்பவர் இடம்பெறுகிறார்.

ஹதீஸ் கலை

ஒருவர் நல்ல மனன சக்தியுள்ளவராக இருப்பார் அவர் பிற்காலத்தில் மனன சக்தி இழந்து விட்டால் குழப்பநிலைக்கு முன்னால் கேட்டவர்களது செய்தியை எடுப்பார்கள் குழப்ப நிலைக்கு பின்னால் கேட்டவர்கள் செய்தியை எடுக்க மாட்டார்கள். குழப்ப நிலைக்கு முன்பா பின்பா என்று தெரியவில்லையென்றால் அவர்களது செய்தியை எடுக்க மாட்டார்கள்.

✤ சயீத் அல் ஜுரைரீ இடமிருந்து 9 பேர் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்த 9 பேரும் இவரது மனன நிலை குழப்பத்திற்கு பின்னர் அறிவித்தவர்கள்.

 💫ஆனால் 2 பேர் குழப்ப நிலைக்கு முன்பு கேட்டவர்கள் அவர்கள் ஹம்மாத் இப்னு சலமா, மற்றும் அப்துல் வஹ்ஹாப் இப்னு சகஃபீ அந்த அறிவிப்பில் ஸஹாபியின் பெயர் இடம்பெறவில்லை. ஆகவே இது ஏற்றுக்கொள்ளத்தக்க செய்தியல்ல.